செக் போஸ்ட்

Added : செப் 03, 2022 | |
Advertisement
வர்த்தக நிறுவனங்களிடம் வசூல்!சுரங்க குடியிருப்பு பகுதிகளில் தனியாரின் ஒரு பெட்ரோல் பங்க், இரண்டு காஸ் சிலிண்டர் விற்பனை நிலையம், குடோன், ஒரு பொறியியல், சட்டக் கல்லுாரி, பல கல்வி நிறுவனங்கள், எல்லாமே வர்த்தக நிறுவனங்கள்.இவைகள் முனிசி.,க்கு வர்த்தக வரி செலுத்துவதாக தெரியவில்லை. சுரங்க நிறுவனத்துக்கும் எந்த வாடகையும் கொடுத்ததாகவும் தெரியவில்லை. இவைகளை



வர்த்தக நிறுவனங்களிடம் வசூல்!

சுரங்க குடியிருப்பு பகுதிகளில் தனியாரின் ஒரு பெட்ரோல் பங்க், இரண்டு காஸ் சிலிண்டர் விற்பனை நிலையம், குடோன், ஒரு பொறியியல், சட்டக் கல்லுாரி, பல கல்வி நிறுவனங்கள், எல்லாமே வர்த்தக நிறுவனங்கள்.

இவைகள் முனிசி.,க்கு வர்த்தக வரி செலுத்துவதாக தெரியவில்லை. சுரங்க நிறுவனத்துக்கும் எந்த வாடகையும் கொடுத்ததாகவும் தெரியவில்லை. இவைகளை நடத்துகிறவர்கள், நகரின் பெரிய கவுரவத்துக்கு சொந்தக்காரர்களாம்.

சுரங்க குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் வீடுகளை 'ரிப்பேர்' செய்ய அனுமதிக்காத செக்யூரிட்டிகள் வர்த்தக நிறுவனங்களை மட்டும் கண்டுகொள்வதே இல்லையாம்.இவர்களுடன் உள் ஒப்பந்தமாக கணக்கில் காட்டாமல் மறைமுகமாக வசூலை செய்து கொள்கின்றனராம். இதுவே மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேருகிறதாம். எல்லாம் தெரிந்தும், கேள்வி கேட்க வேண்டியவர்கள் கண் மூடிக் கொண்டிருக்கலாமான்னு கேள்விகள் எழுந்திருக்குது.

பங்கார் பேட்டையில் போராட்டம்!

பொன்வயலின் சட்டப் பிதா பவன், சிலை விவகாரம் ப.பேட்டையில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்குது.பட்டியல் வகுப்பு கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி, தாசில்தாரிடம் புகார் கொடுத்தனர். ப.பேட்டை மட்டுமின்றி மாவட்டம் முழுதும் உள்ள ஆறு தாலுகாக்களிலுமே போராட்டம் நடத்தும் வேலையை தொடங்கிட்டாங்க.

பியூஸ் பிடுங்க இதுதான் தக்க வாய்ப்புன்னு பூ கார 'லீடர்' துாபம் போட கோதாவில் இறங்கிட்டாராம். தேசிய முத்திரையில் உள்ள ஒரு கட்சித் தலைவரு ப.பேட்டையில் எதிர்ப்பு போராட்டம் நடத்துவாரா; குறுகிய வட்டாரத்துக்குள் ஆதிக்கம் காட்டினால் போதுமென காலத்தை ஓட்டுவாரான்னு தெரியல.

நிலம் ஆக்கிரமிப்பு விசாரணை!

கோடிலிங்க கோவிலுக்கு சொந்தமான உறைவிட பள்ளி, திருமண மண்டபம் ஆகியவை, அரசுக்கு சொந்தமான 6 ஏக்கரை வளைத்துப் போட்டு, சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக கோலார் மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் உரிய ஆவணங்கள் மூலம் புகார் செஞ்சிருக்காங்க. வில்லங்கமான பிரச்னையை, மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த முன் வந்துள்ளார்.

இது குறித்து, கோல்டு சிட்டி பெண் தாசில்தாருக்கு ஆவணங்கள் குறித்துஆய்வு செய்யவும் உத்தரவு போட்டிருக்காரு. கம்மசந்திரா சர்வே எண் 1ல் தான் நிலம் ஆக்கிரமிப்பும், அதில் கட்டடங்கள் கட்டப்பட்டதாகவும் கிராமத்தினர் 'ஆப்பு' வெச்சிருக்காங்க. இதுவும் கோர்ட்டுக்கு செல்லும் பிரச்னையாக மாறிடுச்சு.

மைனிங் நிலம் சுருட்டல்!

மலையாளி மைதானம், சுரங்க நிறுவனத்துக்கு உட்பட்டதென பலருக்கும் தெரியும். இதனையே நகர பகுதியாக 'பட்டா' போட்டு விற்பனை செய்ய, 10 ஆண்டுகளுக்கு முன் முனிசி.,யில் திட்டம் போட்டாங்க.

அதற்காக நிலத்தை அளந்து கொடுத்து,வாங்க வேண்டியதை பையில் நிரப்பிக் கொண்டு, கட்டுமான பணியை துவக்கவும் செய்தாங்க. தாய்மொழி சங்கம் ஏற்படுத்த பெமல் தொழிலாளர்களிடம் பணத்தை கறந்தாங்க. அப்போது விழிப்பாக இருந்த சுரங்க நிர்வாகம், அனுமதி வழங்காமல் தடுத்து நிறுத்திட்டாங்க.

இப்படி தான் சுரங்க நிறுவன இடங்களை 'பட்டா' போட்டு விற்று வருவதையும், பல ஏக்கரை வளைத்து, காம்பவுண்ட் போட்டு வராங்க. இவைகளை தகுதியான ஆபீசர்கள் தடுக்காமல், பணத்தை லுாட்டி அடிக்கிறாங்கன்னு மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்துக்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிச்சிருக்காங்க.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X