கண்துடைப்பாக நடக்கும் மருத்துவ முகாம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
சாக்கோட்டை : சாக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெறும் மருத்துவ முகாம்கள் கண் துடைப்பாக நடைபெறுவதாக தி.மு.க., கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.கூட்டத்திற்கு சேர்மன் சரண்யா தலைமையேற்றார். பி.டி.ஓ., கேசவன், ஹோமலதா முன்னிலை வகித்தனர்.6வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம்: சாக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த மருத்துவ முகாம் மோசமாக நடந்தது.

சாக்கோட்டை : சாக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெறும் மருத்துவ முகாம்கள் கண் துடைப்பாக நடைபெறுவதாக தி.மு.க., கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு சேர்மன் சரண்யா தலைமையேற்றார். பி.டி.ஓ., கேசவன், ஹோமலதா முன்னிலை வகித்தனர்.6வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம்: சாக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த மருத்துவ முகாம் மோசமாக நடந்தது. கண்துடைப்பாக நடந்த இந்த முகாமில் நரம்பியல் டாக்டர் இல்லை. 50க்கும் மேற்பட்டோர் பயன்பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். சிவகங்கை மருத்துவமனைக்கு வரச் சொல்கின்றனர். மீண்டும் முறையான மருத்துவ முகாம் நடத்த வேண்டும்

ஆணையாளர் கேசவன்: மருத்துவ முகாமின் போது, ஒரு சில மருத்துவர்கள் வரவில்லை. அடுத்த முறை மருத்துவ முகாம் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கவுன்சிலர் ராமச்சந்திரன்: என்.ஆர்.சி.எஸ். நிதி முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிதியை முறையாக வழங்கினால் மட்டுமே பணிகள் நடைபெறும்.ஆணையாளர் கேசவன்: சாக்கோட்டை ஒன்றியத்தில் என்.ஆர்.சி.எஸ்., நிதி அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. யாருக்கும் நிதி பென்டிங் இல்லை. வேலைகள் தான் நடைபெறவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X