பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அட்மிட்| Dinamalar

பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் 'அட்மிட்'

Added : செப் 03, 2022 | |
பெங்களூரு-உயர்நிலைப் பள்ளி மாணவியரை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சித்ரதுர்காவின், முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரை, போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். நேற்று அவர் மயங்கி விழுந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சித்ரதுர்காவில் உள்ள முருகா மடம் மிகவும் பிரபலமான மடமாகும். பொது சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. பள்ளிகள் கட்டி, மாணவ -பெங்களூரு-உயர்நிலைப் பள்ளி மாணவியரை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சித்ரதுர்காவின், முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரை, போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். நேற்று அவர் மயங்கி விழுந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சித்ரதுர்காவில் உள்ள முருகா மடம் மிகவும் பிரபலமான மடமாகும். பொது சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. பள்ளிகள் கட்டி, மாணவ - மாணவியருக்கு இலவச கல்வி வழங்குகிறது. அரசியல்வாதிகள், முக்கிய புள்ளிகள் உட்பட, மடத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.இந்நிலையில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, 64, மடத்தின் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் இரு மாணவியரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, இரு மாணவியரும் போலீசில் புகார் அளித்தனர். மடாதிபதியை கைது செய்யும்படி வலியுறுத்தி, பல அமைப்புகள் போராட்டம் நடத்தின.


வெறிச்சோடிய மடம்


கைது பயத்தில், மஹாராஷ்டிராவுக்கு தப்பி செல்ல முற்பட்ட அவரை, போலீசார் வழியில் மடக்கி, மீண்டும் சித்ரதுர்காவுக்கு அழைத்து வந்தனர். அன்று முதல் மடத்தில், யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தார். மடமும் வெறிச்சோடியது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவியருக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. நீதிபதி முன்பாக ஆஜராகி, வாக்குமூலம் அளித்தனர். சிவமூர்த்தி முருகா சரணரு, எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, முருகா மடத்துக்கு சென்ற போலீசார், நீண்ட நேர விசாரணைக்கு பின், இரவு 10:00 மணிக்கு சிவமூர்த்தி முருகா சரணரை 30 கி.மீ., தொலைவில் உள்ள செல்லகரேவுக்கு அழைத்து சென்றனர். டெபுடி எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணை நடத்திய பின், அதிகாரப்பூர்வமாக கைது செய்தனர்.மடாதிபதி கைதானதை அறிந்து, சித்ரதுர்காவின், உலக்கை ஓபவ்வா சதுக்கத்தில், பொது மக்கள் குவிந்தனர்.நள்ளிரவு, மாவட்ட மருத்துவமனையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதிகாலை 3:00 மணியளவில், சித்ரதுர்கா நகரின், 2வது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கோமளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.


பக்தர்கள் குமுறல்


அப்போது மடாதிபதி தரப்பு வக்கீல், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்படி கூறி, 14 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதன்பின் மடாதிபதியை, மாவட்ட சிறைக்கு அழைத்து சென்றனர். அவர் சிறைக்குள் சென்றபோது, சில பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.சிறையில் உறக்கமின்றி தவித்த அவர், நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிறை அதிகாரிகள், உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு இதய நோய், அதிக ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.எனவே மடாதிபதியை, பெங்களூரின் ஜெயதேவா மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 'ஏர் ஆம்புலன்ஸ்' வழியாக அழைத்து செல்வது கஷ்டம் என்பதால் சாலை வழியாக அழைத்து செல்ல ஏற்பாடு நடந்தது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை நடைபயிற்சி முடித்து, பூஜை, புனஸ்காரங்களை செய்வது மடாதிபதியின் அன்றாட வழக்கம். அவரது உதவியாளர் கரிபசவப்பா, பூஜை பொருட்களுடன் காலை 9:30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மடத்திலிருந்து வந்த சிற்றுண்டி, பால், பழங்கள், உடைகள் இருந்த பையையும், போலீசார் அனுமதிக்கவில்லை.தாவணகரேவின், ஹெப்பாலு விரக்த மடத்தின் மஹாந்தருத்ரா சுவாமிகள், மருத்துவமனைக்கு வந்து, சிவமூர்த்தி முருகா சரணரை சந்தித்து, நலம் விசாரித்தார்.

நீதிமன்றம் 'பிடிவாரன்ட்'

பெங்களூரு, கெங்கேரியின், சூலிகரே கிராமத்தில் முருகா மடத்துக்கு சொந்தமான 7.18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, 2013ல் ஆனந்தகுமார் என்பவருக்கு, சிவமூர்த்தி சரணரு சட்ட விரோதமாக விற்றுள்ளதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக, பிரகாஷ் என்பவர், முருகா மடாதிபதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர் ஆஜராகாததால், நீதிமன்றம் அவருக்கு, ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X