சிறுமிக்கு குழந்தை: வாலிபர் கைது

Added : செப் 03, 2022 | |
Advertisement
பெலகாவி,-பெலகாவி, கானாபுராவின், கவுளிவாடா கிராமத்தின் புறநகரில், மரம் ஒன்றில் ஆகஸ்ட் 25ல், பிளாஸ்டிக் கவர் தொங்கியது. இதிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.இதை கவனித்த ஆஷா ஊழியர் சத்யவதி தேசாயி என்பவர், பிளாஸ்டிக் கவரை பார்த்த போது, பச்சிளம் ஆண் குழந்தை இருந்தது தெரிந்தது.உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து, கானாபுரா தாலுகா மருத்துவமனையில் சேர்த்தார். கூடுதல் சிகிச்சை



பெலகாவி,-பெலகாவி, கானாபுராவின், கவுளிவாடா கிராமத்தின் புறநகரில், மரம் ஒன்றில் ஆகஸ்ட் 25ல், பிளாஸ்டிக் கவர் தொங்கியது. இதிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.இதை கவனித்த ஆஷா ஊழியர் சத்யவதி தேசாயி என்பவர், பிளாஸ்டிக் கவரை பார்த்த போது, பச்சிளம் ஆண் குழந்தை இருந்தது தெரிந்தது.உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து, கானாபுரா தாலுகா மருத்துவமனையில் சேர்த்தார். கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டதால், பெலகாவி மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக, கானாபுரா போலீசார் விசாரணை நடத்தினர். கவுளிவாடா கிராமத்தின் அப்பு பிங்களே, 19, என்பவரை கைது செய்தனர். இவர் கானாபுரா கிராமம் ஒன்றின் 16 வயது பள்ளி மாணவியை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, பாலியல் பலாத்காரம் செய்தார்.இதில் சிறுமி கர்ப்பமடைந்து, ஆண் குழந்தை பெற்றார். இதை பிளாஸ்டிக் கவரில் வைத்து, மரத்தில் தொங்க விட்டதை ஒப்புக் கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X