எடியூரப்பாவுக்கு ஆதரவு; தொண்டர்கள் கோஷம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
மங்களூரு-பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி, மங்களூரு வந்திருந்தார். அப்போது தொண்டர்கள் பலரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.தட்சிண கன்னடா, மங்களூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று வருகை தந்திருந்தார். இது அரசியல் நிகழ்ச்சி என்றாலும், தேர்தல் நேரம் என்பதால், பிரதமரின் வருகை



மங்களூரு-பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி, மங்களூரு வந்திருந்தார். அப்போது தொண்டர்கள் பலரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.தட்சிண கன்னடா, மங்களூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று வருகை தந்திருந்தார். இது அரசியல் நிகழ்ச்சி என்றாலும், தேர்தல் நேரம் என்பதால், பிரதமரின் வருகை பா.ஜ.,வினரை பொருத்த வரை, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.நிகழ்ச்சி மேடையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் இடம் பிடித்திருந்தார். இதற்கு பிரதமர் மோடியின் தனிப்பட்ட அழைப்பே காரணம். நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். தொண்டர்கள் எடியூரப்பாவுக்கு வாழ்த்து கோஷம் போட்டனர். இதன் மூலம், தன் சக்தியை பிரதமருக்கு காண்பிக்க முயற்சித்ததாக, பா.ஜ., வட்டாரம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X