இன்று முதல் 5 வரை மதுபானம் விற்க தடை

Added : செப் 03, 2022 | |
Advertisement
பெங்களூரு-''பல்வேறு அமைப்புகளால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படுவதால், இன்று மாலை முதல் வரும் 5 ம் தேதி காலை வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு அமைப்பினர், பல்வேறு பகுதிகளில்
இன்று முதல் 5 வரை மதுபானம் விற்க தடை



பெங்களூரு-''பல்வேறு அமைப்புகளால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படுவதால், இன்று மாலை முதல் வரும் 5 ம் தேதி காலை வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு அமைப்பினர், பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:நகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்படவுள்ளன. வித்யாரண்யபரா, எலஹங்கா, எலஹங்கா நியு டவுன், கொடிகேஹள்ளி, கே.ஜி., ஹள்ளி, கோவிந்தபுரா, டி.ஜே., ஹள்ளி, பானஸ்வாடி, கமர்ஷியல் தெரு, சிவாஜி நகர், பாரதி நகர், புலிகேசி நகர், ஹலசூரு பகுதிகளில் இன்று மாலை 6:00 மணி முதல் வரும் 5ம் தேதி காலை 6:00 மணி வரை மதுபானம் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X