5 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை!

Updated : செப் 03, 2022 | Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை : ஐந்து மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.நாளை முதல் இரண்டு
கனமழை , சென்னை வானிலை, தமிழக வானிலை,  TN weather,  Chennai weather, மழை, Heavy rain, Tamilnadu weather,rain,

சென்னை : ஐந்து மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்துார், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


latest tamil news


வடக்கு கேரள கடலோரம், லட்சத்தீவு மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X