கல்லூரி பஸ் மீது லாரி மோதல்; 41 மாணவர்கள் படுகாயம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே தனியார் கல்லுாரி பஸ் மீது லாரி மோதிய விபத்தில், 41 மாணவர்கள் காயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொழுதுார் பகுதியில் தனியார் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், விருத்தாசலம் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லுாரி பஸ்சில் தினசரி சென்று வருகின்றனர்.நேற்று வழக்கம்போல், விருத்தாசலத்தில் மாணவர்களை ஏற்றிக்
கல்லூரி பஸ் மீது லாரி மோதல்; 41 மாணவர்கள் படுகாயம்



விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே தனியார் கல்லுாரி பஸ் மீது லாரி மோதிய விபத்தில், 41 மாணவர்கள் காயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொழுதுார் பகுதியில் தனியார் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், விருத்தாசலம் பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லுாரி பஸ்சில் தினசரி சென்று வருகின்றனர்.நேற்று வழக்கம்போல், விருத்தாசலத்தில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற கல்லுாரி பஸ், 9 மணியளவில் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் உள்ள சாத்தியம் கிராமத்தில் உள்ள மாணவர்களை ஏற்றிச் செல்ல நின்றது.அப்போது, அவ்வழியாக பின்னால் வந்த லாரி (டி.என்.46 - ஒய் 8899) பஸ்சின் மீது மோதியது. இதில், கல்லுாரி பஸ்சில் இருந்த 41 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு மாணவ, மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், மாணவர் பாலாஜி, அப்துல் சுல்தான், செந்தில்நாதன், ஆகியோருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அமைச்சர் ஆறுதல்

காயமடைந்த மாணவர்களை, அமைச்சர் கணேசன் நேற்று மாலை சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்த அவர், தலைமை மருத்துவர் எழில்மதியிடம், உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசிய அவர், பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X