சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் விபத்து அபாயம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
புதுச்சேரி-சிக்னல்களில் பிச்சையெடுக்கும் கும்பலால், வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி சிக்னல்களில் பிச்சை எடுப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம், குழந்தையுடன் வந்து கார் கண்ணாடியை தட்டி பிச்சை கேட்கின்றனர். பிச்சை கொடுக்கும் வரை அவர்கள் விடுவதில்லை. இதனால் சுற்றுலா
சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் விபத்து அபாயம்



புதுச்சேரி-சிக்னல்களில் பிச்சையெடுக்கும் கும்பலால், வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி சிக்னல்களில் பிச்சை எடுப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம், குழந்தையுடன் வந்து கார் கண்ணாடியை தட்டி பிச்சை கேட்கின்றனர். பிச்சை கொடுக்கும் வரை அவர்கள் விடுவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.குறிப்பாக, ராஜிவ் , இந்திரா சிக்னல்களில் பிச்சைக்காரர்கள் அதிகரித்துள்ளனர். சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருக்கும் போது சாலை நடுவே வந்து விடுகின்றனர். சிக்னல் விழுந்த பிறகும் அவர்கள் விலகி செல்லாமல் நிற்பதால் வாகனத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுபோல, சிக்னல்களில் இடையூறாக நின்று பல்வேறு பொருட்களை விற்பவர்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவர்களை தமிழக பகுதிகளில் இருந்து ஒரு கும்பல் தினசரி வேனில் அழைத்து வந்து ஒவ்வொரு சிக்னலாக காலையில் இறக்கி விடுகின்றனர். தொடர்ந்து, இரவு 8:00 மணி வரை பிச்சை எடுக்கின்றனர்; கிடைத்ததை சாப்பிடுகின்றனர். இரவில், இவர்கள் மீண்டும் வேனில் அழைத்து செல்லப்படுகின்றனர். இது, தினசரி தொடர்ந்து நடந்து வருகிறது. பிச்சை கேட்போர், பொருட்களை விற்போர் அனைவரும் ஓடிசா, பீகார், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை, குளிர் என்று பாராமல் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை கேட்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்தும் நேரிடுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சிக்னல்களில் பிச்சை எடுக்கும் கும்பல் மீது, அங்கு பணியில் உள்ள போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் அதிகாரிகளுடன், சமூக நலத் துறை அதிகாரிகளும், அரசின் குழந்தைகள் நல அமைப்பினரும் கைகோர்த்து களம் இறங்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X