ஆதார் எண்ணை இணைக்க நாளை சிறப்பு முகாம்: புதுச்சேரி தேர்தல் துறை ஏற்பாடுபு

Added : செப் 03, 2022 | |
Advertisement
துச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 40 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ள நிலையில், நாளை 4ம் தேதி ஒரு நாள் சிறப்பு முகாமிற்கு, மாநில தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் மற்றும் குறைகளை சரி செய்யும் நோக்கத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, இந்திய
ஆதார் எண்ணை இணைக்க நாளை சிறப்பு முகாம்: புதுச்சேரி தேர்தல் துறை ஏற்பாடுபு


துச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 40 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ள நிலையில், நாளை 4ம் தேதி ஒரு நாள் சிறப்பு முகாமிற்கு, மாநில தேர்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் மற்றும் குறைகளை சரி செய்யும் நோக்கத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இப்பணி, கடந்த 1ம் தேதி துவங்கி மிக வேகமாக நடந்து வருகிறது.மொத்தமுள்ள 10 லட்சத்து 10 ஆயிரத்து 942 வாக்காளர்களின் இதுவரை 4 லட்சத்து 4 ஆயிரத்து 638 வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். அதாவது, மொத்த வாக்காளர்களில் 40 சதவீத பேர் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்து தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.தேர்தல் ஆணையத்தின் 'பூத் லெவல்' அதிகாரிகள் வீடு வீடாக சென்று, 'பார்ம்-6பி' படிவத்தை விநியோகித்து வருகின்றனர். இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து 3 லட்சத்து 92 ஆயிரத்து 474 பேர் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.

வாக்காளர் செயலி மூலமாக 5,937 பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். தேசிய வாக்காளர் இணைய தளம் மூலமாக 905 பேர் இணைத்துள்ளனர். இதுமட்டுமின்றி, 3,824 பேர் 'பார்ம்-6பி' படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து டிஜிட்டல் மூலமாக ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்றாலும்கூட, மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிக வேகமாக ஆதார் எண் புதுச்சேரி மாநிலத்தில் இணைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி வாக்காளர்களின் ஆர்வத்தை கண்ட மாநில தேர்தல் துறை நாளை 4ம் தேதி ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.இதன்படி, நாளை 4ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, அனைத்து ஓட்டுச் சாவடிகளும் திறந்து இருக்கும். ஓட்டுச்சாவடி மையத்தில் 'பார்ம்-6பி' படிவத்தை வாக்காளர்கள் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, ஆதார் எண்ணை குறிப்பிட்டு வழங்க வேண்டும். ஆதார் ஜெராக்ஸ் காப்பியை காட்டினால் போதும்.அவ்வாறு வழங்கினால், அதிகப்பட்சம் 10 நிமிடங்களுக்குள்ளாக ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் எளிதாக இணைக்கப்பட்டு விடும். இதற்கான கருடா செயலியை ஓட்டுச் சாவடி அதிகாரிகள் ரெடியாக வைத்துள்ளனர். இதன் மூலம் தவறில்லாத, இரட்டை பதிவு இல்லாத துல்லியமான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை உறுதி செய்யலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X