அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கேதாரகெளரி; பூஜை நாளை துவக்கம்: 21 நாள் தபசு வழிபாடு

Added : செப் 03, 2022 | |
Advertisement
திருச்செங்கோடு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், பார்வதிதேவி இடப்பாகம் பெற்ற புராதன சிறப்பு வாய்ந்த, கேதாரகெளரி விரத சிறப்பு பூஜை நாளை துவங்குகிறது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சிவனும், பார்வதியும் ஒரு உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பார்வதிதேவி, சிவபெருமானிடம் விரதம் இருந்து இடப்பாகம் பெற்றதாக ஐதீகம். இதற்கான


திருச்செங்கோடு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், பார்வதிதேவி இடப்பாகம் பெற்ற புராதன சிறப்பு வாய்ந்த, கேதாரகெளரி விரத சிறப்பு பூஜை நாளை துவங்குகிறது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சிவனும், பார்வதியும் ஒரு உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். பார்வதிதேவி, சிவபெருமானிடம் விரதம் இருந்து இடப்பாகம் பெற்றதாக ஐதீகம். இதற்கான கேதாரகெளரி விரத வழிபாட்டு விழா, நாளை துவங்குகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் மஹாலயபட்ச அமாவாசைக்கு முன்தினம், 21வது நாளாக வருமாறு கணக்கிட்டு, பூஜைகள் துவங்கி நடத்தப்படும்.

இந்த, 21 நாட்களும், 21 விதமான பதார்த்தங்கள் படையலிட்டு, பஞ்சாசனம் மற்றும் தபசு வழிபாட்டு முறையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 21வது நாளான மஹாளயபட்ச அமாவாசைக்கு முன்தினம், ஆவாகணம் செய்யப்பட்டு, தினமும் பூஜை செய்யப்பட்டு வரும் கலசதீர்த்தத்தில், கடலை தின்ற நந்தீஸ்வரருக்கு தீர்த்தாபிஷேகம் செய்யப்படும். வரும் செப்., 24ம் தேதி வரை, கேதாரகெளரி சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டு, மதியம் சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். திருமணத்தடை நீங்கவும், குடும்ப ஒற்றுமை மேம்படவும், கேதாரகெளரி விரத வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்வர். திருமணம் தடை உள்ளவர்கள், புதுத்துணி வைத்து தீபம் ஏற்றி, விரதம் இருந்து வழிபடுவர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இதில் பங்கேற்பர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X