மனைவியைத் தாக்கிய கணவருக்கு வலை| Dinamalar

மனைவியைத் தாக்கிய கணவருக்கு வலை

Added : செப் 03, 2022 | |
வானுார்,-கிளியனுார் அருகே மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.கிளியனுார் அடுத்த தென்சிறுவலுாரைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 36; அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவன், 47; கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். கடந்த 29ம் தேதி குடித்து



வானுார்,-கிளியனுார் அருகே மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.கிளியனுார் அடுத்த தென்சிறுவலுாரைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 36; அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவன், 47; கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். கடந்த 29ம் தேதி குடித்து விட்டு வந்த, தேவன், வெண்ணிலா வீட்டிற்குச் சென்று, அவரிடம் தகராறு செய்து, கத்தியால், வெட்டினார்.வெண்ணிலா அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் தேவன் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X