அ.தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்..

Added : செப் 03, 2022 | |
Advertisement
வானுார்-அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியதையொட்டி, வானுாரில் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.,வினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.சென்னை உயர்நீதிமன்றம், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., கூட்டிய பொதுக்குழு செல்லும் என நேற்று தீர்ப்பு அளித்தது. இதையொட்டி, வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், நேற்று சக்ரகபாணி எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்..



வானுார்-அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியதையொட்டி, வானுாரில் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.,வினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.சென்னை உயர்நீதிமன்றம், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., கூட்டிய பொதுக்குழு செல்லும் என நேற்று தீர்ப்பு அளித்தது. இதையொட்டி, வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், நேற்று சக்ரகபாணி எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். அணி செயலாளர்கள் வீரப்பன், கார்த்திகேயன், சுமன், ஐ.டி., பிரிவு செயலாளர் எழில்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் சிவசங்கரி.மாணவரணி துணைத்தலைவர் ராஜா, இளைஞரணி துணைச் செயலாளர் அரிசிவம், மாவட்ட பிரதிநிதி உமாபதி, எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சங்கர், கிளைச் செயலாளர் பிரகாஷ்.இளைஞர் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்பீம், இலக்கிய அணி துணைச் செயலாளர் பாலு, ஊராட்சி தலைவர்கள் ஜெய்சங்கர், வில்வமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X