திருமண மண்டபத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
மயிலம்-மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுகாதார குறைபாடு இருந்ததால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இங்கு, குப்பைகள் மற்றும் இலைகளை மண்டபத்தின் எதிரே நெடுஞ்சாலையோரத்தில் குவித்திருந்தனர்.விழுப்புரத்தில் இருந்து அந்த வழியாக திண்டிவனம் சென்ற கலெக்டர்



மயிலம்-மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுகாதார குறைபாடு இருந்ததால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இங்கு, குப்பைகள் மற்றும் இலைகளை மண்டபத்தின் எதிரே நெடுஞ்சாலையோரத்தில் குவித்திருந்தனர்.விழுப்புரத்தில் இருந்து அந்த வழியாக திண்டிவனம் சென்ற கலெக்டர் மோகன் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததைத் பார்த்து, அதிகாரிகளிடம் ஆய்வு செய்து அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் ஊராட்சி செயலாளர் நடராஜ் ஆகியோர் திருமண மண்டபத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அந்த தொகையை வசூல் செய்து கூட்டேரிப்பட்டு ஊராட்சி நிதியில் சேர்த்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X