மாவட்டத்தில் 1,226 விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்| Dinamalar

மாவட்டத்தில் 1,226 விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்

Added : செப் 03, 2022 | |
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1,536 விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இதில், 1,226 சிலைகள் நேற்று, முதல் பகுதியாக வாகனங்களில் ஊர்வலமாகக் கொண்டு சென்று, கடலுார், தேவனாம்பட்டினம்
மாவட்டத்தில் 1,226 விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் 1,536 விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இதில், 1,226 சிலைகள் நேற்று, முதல் பகுதியாக வாகனங்களில் ஊர்வலமாகக் கொண்டு சென்று, கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரை, மரக்காணம் கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய போலீஸ் சப் டிவிஷன்களில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக, நேற்று மதியம் 2:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். இதற்கான பாதுகாப்பு பணிகளில் 1,400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.


மரக்காணம்


செஞ்சி, திண்டிவனம், ஒலக்கூர், மரக்காணம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று, மரக்காணம் பகுதியில் உள்ள எக்கியர்குப்பம், கைப்பாணிக்குப்பம் கடற்கரையில் படகு மூலம் கடலுக்குள் எடுத்துச் சென்று விஜர்சனம் செய்தனர்.அதே போல் புதுச்சேரி, வானுார், வளவனுார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த, விநாயகர் சிலைகளை பக்தர்கள் வாகனங்களில் எடுத்து வந்து, கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தந்திராயன்குப்பம், புதுக்குப்பம், பொம்மையார்பாளையம் கடலில் விஜர்சனம் செய்தனர். கடல் சீற்றம் அதிகளவில் இருந்ததால் படகில் மீனவர்கள் மட்டும் செல்ல அனுமதியளிக்கப்பட்டனர்.


திருவெண்ணெய்நல்லுார்


ஹிந்துமுன்னணி சார்பில் கடைவீதியில் துவங்கிய ஊர்வலத்திற்கு, மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ஜெயச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால், ஒன்றிய பொதுச்செயலாளர் அழகேசன், செயலாளர்கள் அன்பரசன், அசோக் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் முருகையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஊர்வலத்தை முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சரவணகுமார், பாஷாஜான் துவக்கி வைத்தனர். இதில் திருவெண்ணெய்நல்லுார், சிறுவானுார், பெரியசெவலை, சரவணம்பாக்கம், டி.குன்னத்துார், கீரிமேடு, கிராமம், சாராயமேடு, அரசூர், ஏமப்பூர் பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட சிலைகளை ஊர்வலமாக கடலுார் கடலில் கரைக்க கொண்டு சென்றனர்.


விக்கிரவாண்டி


விக்கிரவாண்டி மற்றும் பெரியதச்சூர் காவல் நிலைய பகுதிகளில் இருந்து 48 விநாயகர் சிலைகள் வேன்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வீடூர் அணையில் கரைத்தனர். விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் தேவரத்தினம், மகிபால், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X