'மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஆட்சி நடத்தி வரும் முதல்வர்'

Added : செப் 03, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மேட்டுப்பாளையம் : ''மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஆட்சியை, முதல் வர் நடத்தி வருகிறார்,'' என,மத்திய இணையமைச்சர் முருகன் பேசினார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், ஹிந்து முன்னணி மக்கள் எழுச்சி விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். விழாவில் மத்திய இணையமைச்சர் முருகன் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின்,
 'மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஆட்சி நடத்தி வரும் முதல்வர்'



மேட்டுப்பாளையம் : ''மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் ஆட்சியை, முதல் வர் நடத்தி வருகிறார்,'' என,மத்திய இணையமைச்சர் முருகன் பேசினார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், ஹிந்து முன்னணி மக்கள் எழுச்சி விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். விழாவில் மத்திய இணையமைச்சர் முருகன் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவானவர். மற்ற விழாக்களுக்கு செல்லும் இவர், ஏன் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று, வாழ்த்து சொல்லவில்லை. எனவே, மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து முதல்வர் தவறி விட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ள முதல்வர், மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்ஆட்சியை நடத்தி வருகிறார். எனவே, மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு, மத்திய இணையமைச்சர் முருகன் பேசினார். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் சங்கீதா, ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.


'சட்டம் ஒழுங்கு மோசம்!'



மேட்டுப்பாளையத்தில், மத்திய இணையமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் அதிகளவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை, தமிழக அரசு கட்டுப்படுத்தாமல் உள்ளது. போலீசார், ஜெயிலர் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது.தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை நவீனப்படுத்த,1,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பைபாஸ் ரோடு திட்டம் குறித்து, விபரங்களை கேட்டு, அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
03-செப்-202213:54:05 IST Report Abuse
raja "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது"...
Rate this:
raja - Cotonou,பெனின்
03-செப்-202214:09:47 IST Report Abuse
raja.........
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
03-செப்-202210:49:14 IST Report Abuse
Sampath Kumar ,,,,
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
03-செப்-202210:16:53 IST Report Abuse
ThiaguK மெதுவாக சொல்லி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X