ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவிலில் மடப்பள்ளி புதுப்பிக்க பூமிபூஜை| Dinamalar

ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவிலில் மடப்பள்ளி புதுப்பிக்க பூமிபூஜை

Added : செப் 03, 2022 | |
ரிஷிவந்தியம்-ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் மடப்பள்ளி புதுப்பிப்பதற்கான பூமி பூஜை நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கியதில் கோவிலில் இருந்த மடப்பள்ளி கட்டடம் பழுதாகியது. கட்டடத்தைப் புதுப்பிக்க அறநிலையத்துறை சார்பில் 50 லட்சத்து 50
ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவிலில் மடப்பள்ளி புதுப்பிக்க பூமிபூஜை

ரிஷிவந்தியம்-ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் மடப்பள்ளி புதுப்பிப்பதற்கான பூமி பூஜை நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கியதில் கோவிலில் இருந்த மடப்பள்ளி கட்டடம் பழுதாகியது. கட்டடத்தைப் புதுப்பிக்க அறநிலையத்துறை சார்பில் 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணி துவங்குவதற்கான பூமிபூஜை நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,பணியைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அறநிலைத் துறை உதவி ஆணையர் சிவாகரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன். பேரூராட்சி செயலாளர் ஜெய்கணேஷ், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பாலாஜி பூபதி, ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், ஊர் முக்கியஸ்தர்கள் லட்சுமிகுமார், துளசிங்கம், அறநிலையத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X