தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'

Updated : செப் 03, 2022 | Added : செப் 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி-இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியது.உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தின் ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி-இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியது.



latest tamil news



உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தின் ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இலங்கை சிறையில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்களது படகுகளும் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. அவர்களை விடுவிக்க, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாக்க, சர்வதேச எல்லையில் இந்திய கடற்படை கப்பலை கண்காணிப்புக்கு நிறுத்தும்படியும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


latest tamil news



இந்த மனு, நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
03-செப்-202213:21:29 IST Report Abuse
raja யார் என்று கேட்டால் மூச்சு விடமாட்டான் ..
Rate this:
raja - Cotonou,பெனின்
03-செப்-202214:04:49 IST Report Abuse
rajaஇந்த ........
Rate this:
raja - Cotonou,பெனின்
03-செப்-202214:11:52 IST Report Abuse
rajaகட்ச தீவை தாரைவார்த்து யாருன்னு கேட்டா விடியாமூஞ்சி கோமாளி எல்லாத்தையும் மூடி பொத்திகிறான்........
Rate this:
Cancel
03-செப்-202210:27:14 IST Report Abuse
ஆரூர் ரங் விசைப்படகுகள் மூலம் எல்லை மீறி மீன் பிடிக்கும் நபர்களை தூக்கிலிட வேண்டும் . இனிமேல் அவர்களுக்கு ஓசி சோறு போடும் திறன் இலங்கைக்கு இல்லை. இவர்களால் பாதிக்கபடுவது இலங்கை தமிழ் கட்டுமர மீனவர்கள்தான்.
Rate this:
Cancel
03-செப்-202209:05:20 IST Report Abuse
N SASIKUMAR YADHAV இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லும்போது இந்த வழக்கை போட்டவர் என்ன செய்துக்கொண்டிருந்தார் . எல்லை தாண்டி மீன்பிடித்தால் கைது செய்யமாட்டார்களா . போதைப்பொருள் கடத்தலும் மீனவர்கள் போர்வையில் நடக்கிறது . அதெல்லாம் அபபப்ப பேச்சுவார்த்தை நடத்தி கைதின் தன்மை பற்றி பேசி விடுதலை செய்கிறார்கள் . பொழுதுபோக்குக்காக இதுபோல வழக்குகள் போடுகிறார்கள் . கான்கிராஸ் ஆட்சியில் சுட்டுக்கொல்லும்போது இதுபோல யாரும் வழக்கு போடவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X