தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டணம் உயர்வு

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை: தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் சரக்கு மற்றும் சொந்த வாகன உரிமையாளர்கள் பயண செலவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன.இதில், 5,095 கி.மீ., சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி பராமரிப்பில் உள்ளது. மீதமுள்ள 1,511 கி.மீ., சாலை, தமிழக

சென்னை: தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் சரக்கு மற்றும் சொந்த வாகன உரிமையாளர்கள் பயண செலவு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன.இதில், 5,095 கி.மீ., சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி பராமரிப்பில் உள்ளது. மீதமுள்ள 1,511 கி.மீ., சாலை, தமிழக நெடுஞ்சாலைத்துறையின், தேசிய நெடுஞ்சாலை பிரிவு பராமரிப்பில் உள்ளது. இச்சாலை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிக்கு தேவையான நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் வழங்கி வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்கு, 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

சாலை அமைப்பதற்கான, செலவை வசூல் செய்தபிறகு, சுங்க கட்டணத்தை ரத்து செய்யவும், பராமரிப்பு பணிக்காக குறைந்த கட்டணத்தை வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.ஆனால், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், சுங்க கட்டணம் தொடர்ந்து வசூல்செய்வதுடன், ஒவ்வொரு ஆண்டும் கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது. விதியை மீறி குறைந்த தொலைவில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, வசூல்வேட்டை நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்நிலையில், 28 சுங்கச்சாவடிகளில், 1ம்தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வாகனங்களின் டயர்களுக்கு தகுந்தபடி, 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.இதனால், சென்னையில் இருந்து செல்லும் வாகனங்களுக்கான பயண செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. சுங்க கட்டண உயர்வு, சரக்கு வாகன உரிமையாளர்கள் மட்டுமின்றி, சொந்த கார் வைத்துள்ளவர்கள் மத்தியிலும் சுமையை ஏற்படுத்திஉள்ளது.

சென்னையில் இருந்து கோவைக்கு 505 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு 10 சுங்கச்சாவடிகளில் 580 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 695 ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு 462 கி.மீ., பயணிக்க ஒன்பது சுங்கச்சாவடிகளில் 585 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இது, தற்போது 645 ரூபாயாக அதிகரித்து உள்ளது.சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு 345 கி.மீ., பயணிக்க, ஏழு சுங்கச்சாவடிகளில் 430 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

இது தற்போது 460 ரூபாயாகஉயர்ந்துள்ளது.இதேபோல, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 705 கி.மீ., பயணம் செய்வதற்கு 13 சுங்கச்சாவடிகளில் 955 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 1,055 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுஉள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X