மெட்ரோ ரயில் திட்டப்பணி: கிரேன் சரிந்து விபத்து

Added : செப் 03, 2022 | |
Advertisement
கொளத்துார்: மெட்ரோ ரயில் திட்டப்பணியின் போது, கிரேனின் சக்கரம் மணலில் புதைந்து சரிந்ததால், மேம்பாலத்தின் மீது இரும்பு துாண் விழுந்து விபத்து ஏற்பட்டது. சென்னை மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலான, 15 கி.மீ., துாரத்திற்கு, 'எல் அண்ட் டி' தனியார் நிறுவனம் மூலம், மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி நடக்கிறது. இந்த நிலையில், கொளத்துார் ரெட்டேரி சந்திப்பில் உள்ள மேம்பாலங்களின்
மெட்ரோ ரயில் திட்டப்பணி: கிரேன் சரிந்து விபத்து

கொளத்துார்: மெட்ரோ ரயில் திட்டப்பணியின் போது, கிரேனின் சக்கரம் மணலில் புதைந்து சரிந்ததால், மேம்பாலத்தின் மீது இரும்பு துாண் விழுந்து விபத்து ஏற்பட்டது.

சென்னை மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலான, 15 கி.மீ., துாரத்திற்கு, 'எல் அண்ட் டி' தனியார் நிறுவனம் மூலம், மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப்பணி நடக்கிறது. இந்த நிலையில், கொளத்துார் ரெட்டேரி சந்திப்பில் உள்ள மேம்பாலங்களின் இடைவெளியில், 'கான்கிரீட் துாண்' அமைக்க திட்டமிட்டிருந்தனர். பள்ளம் தோண்டுவதற்காக, நேற்று முன் தினம் நள்ளிரவு, பூமியை துளையிடும் இரும்பு குழாய் இயந்திரத்தை, நிலை நிறுத்தும் பணியில், 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பலத்த மழையால் மேற்கண்ட இடத்தில் தண்ணீர் தேங்கி, ஊறி இருந்தது. அதனால், அங்கு மழை நீர் தேங்கி, மண் உறுதியற்று இருந்தது. இந்த நிலையில், 150 'டன்' எடை உடைய இரும்பு குழாய் இயந்திரத்தை தாங்கிய, கிரேனின் சக்கரம், ஒரு பக்கமாக மண்ணில் புதைந்து, சரிந்தது. அதனால், அதில் நிறுத்தப்பட்டிருந்த அந்த இயந்திரம், அருகில் உள்ள, ரெட்டேரி மேம்பாலம் மீது விழுந்தது. அதில் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்தது.

அப்போது, அங்கு பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், அச்சத்தில் தப்பி ஓடினர். வழக்கமான போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாத, நள்ளிரவு நேரத்தில், இந்த விபத்து நடந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படவில்லை. இதையடுத்து, கிரேன் மற்றும் பூமியை துளையிடும் இரும்பு குழாய் இயந்திரம் ஆகியவை, பாதுகாப்பாக அகற்றப்பட்டு, அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து, ராஜமங்கலம் போலீசார், கட்டுமான நிறுவன அலுவலர்களிடம் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X