அரசு பஸ் முன் படுத்து அடம் மன நோயாளியால் பரபரப்பு

Added : செப் 03, 2022 | |
Advertisement
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அரசு பஸ் சக்கரம் முன் படுத்து அடம் பிடித்த மனநல நோயாளியால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பாலப்பட்டைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி, 40; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது மனைவி கல்யாணி.நேற்று கலியமூர்த்தியை, அவரது மனைவி கல்யாணி, சங்கராபுரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். மதியம், 12:30 மணியளவில்,
அரசு பஸ் முன் படுத்து அடம் மன நோயாளியால் பரபரப்பு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அரசு பஸ் சக்கரம் முன் படுத்து அடம் பிடித்த மனநல நோயாளியால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பாலப்பட்டைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி, 40; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது மனைவி கல்யாணி.நேற்று கலியமூர்த்தியை, அவரது மனைவி கல்யாணி, சங்கராபுரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். மதியம், 12:30 மணியளவில், கடைவீதி மும்முனை சந்திப்பு அருகே வந்தவர், திடீரென அங்கு நின்ற அரசு டவுன் பஸ்சின் முன் சக்கரம் முன் படுத்துக் கொண்டார். அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் வெளியே வரும்படி கூறியும், அவர் வர மறுத்து அடம் பிடித்தார்.

போலீசார், கலியமூர்த்தியை சமாதானம் செய்து அவரை, 12:40 மணியளவில் அப்புறப்படுத்தி, விசாரித்தனர். அவர் மனநலம் சரியில்லாதவர் என தெரியவந்ததைத் தொடர்ந்து, மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X