குழந்தையை கோரும் வழக்கு விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை: குழந்தையை ஒப்படைக்க கோரி, பிரிந்த தம்பதியினர் தொடரும் வழக்குகளை விசாரிக்க, உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குடும்ப நல நீதிமன்ற சட்டம், 1984ல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பின், விவாகரத்து பெறும் தம்பதியினர், தங்கள் குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை, நேரடியாக உயர் நீதிமன்றம் விசாரிக்க

சென்னை: குழந்தையை ஒப்படைக்க கோரி, பிரிந்த தம்பதியினர் தொடரும் வழக்குகளை விசாரிக்க, உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குடும்ப நல நீதிமன்ற சட்டம், 1984ல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பின், விவாகரத்து பெறும் தம்பதியினர், தங்கள் குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை, நேரடியாக உயர் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என, உயர் நீதிமன்ற தனி நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.இந்தப் பிரச்னை குறித்து முடிவெடுக்க, கூடுதல் எண்ணிக்கையில் நீதிபதிகள் அடங்கிய அமர்வை நியமிக்கும்படி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.மகாதேவன், எம்.சுந்தர், ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் நக்கீரன் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்தார்.இந்த நீதிபதிகள் அமர்வு, தொடர் விசாரணை நடத்தியது. மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இவ்வழக்கில், ஐந்து நீதிபதிகள் அமர்வு, நேற்று உத்தரவு பிறப்பித்தது.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர், 'உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை' என்றும்; நீதிபதிகள் மகாதேவன், சுந்தர், நக்கீரன் ஆகியோர், 'உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது' என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை பிறப்பித்தனர். பெரும்பான்மையாக, மூன்று நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X