அடக்கி ஆண்ட பிரிட்டனை முந்தியுள்ளோம்: கோட்டக் சிஇஓ பெருமிதம்

Updated : செப் 03, 2022 | Added : செப் 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஐஎம்எப்., அமைப்பு டாலர் மதிப்பின் அடிப்படையில் எடுத்த பொருளாதார கணக்கீட்டில் பிரிட்டனை முந்தி இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை எட்டியுள்ளது. நம்மை காலனியாக்கி ஆண்ட பிரிட்டனை முந்தியிருப்பது பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம் என கோட்டக் வங்கி சி.இ.ஓ., உதய் கோட்டக் கூறினார்.உலக அளவில் ஐந்து பெரும் பொருளாதாரங்களை பட்டியலிட்டால் அமெரிக்கா, சீனா, ஜப்பான்,
Indian_Economy, Udhay_Kotak, இந்தியா, பொருளாதாரம், பிரிட்டன், Britain

ஐஎம்எப்., அமைப்பு டாலர் மதிப்பின் அடிப்படையில் எடுத்த பொருளாதார கணக்கீட்டில் பிரிட்டனை முந்தி இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை எட்டியுள்ளது. நம்மை காலனியாக்கி ஆண்ட பிரிட்டனை முந்தியிருப்பது பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம் என கோட்டக் வங்கி சி.இ.ஓ., உதய் கோட்டக் கூறினார்.

உலக அளவில் ஐந்து பெரும் பொருளாதாரங்களை பட்டியலிட்டால் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகியவை இடம்பெறும். இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் கடந்த 202க்கான பொருளாதார கணக்கீட்டினை வெளியிட்டது. இதில் ஒவ்வொரு நாடுகளின் பொருளாதாரங்களும் டாலரில் மதிப்பிடப்பட்டு பட்டியலிடப்பட்டது. அதில் இந்திய பொருளாதாரம் 3.5 லட்சம் கோடி டாலராக உள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் 3.2 லட்சம் கோடி டாலராக குறைந்து 6ம் இடம் சென்றுள்ளது.


latest tamil news



இது குறித்து தொழிலதிபர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உதய் கோட்டக் கூறியதாவது: நமது காலனித்துவ ஆட்சியாளரான பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பது பெருமைக்குரிய தருணம். இந்தியா 3.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம். பிரிட்டன் 3.2 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் 140 கோடி பேர், பிரிட்டனில் 6.8 கோடி பேர். அதன்படி பார்த்தால் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவில் ரூ.1.8 லட்சம், பிரிட்டனில் ரூ.35 லட்சம் ஆக உள்ளது. நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. அதை நோக்கி பயணிப்போம். இவ்வாறு கூறினார்.


latest tamil news


மஹேந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹேந்திரா கூறியதாவது: கர்மாவின் விதிகள் செயல்படுகின்றன. இந்த செய்தி சுதந்திரத்திற்காக கடுமையாகப் போராடிய மற்றும் தியாகம் செய்த ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் நிரப்பியிருக்கும். இந்தியா பொருளாதார குழம்பங்களுக்குள்ளாகும் என்று நினைத்தவர்களுக்கு அமைதியான ஆனால் வலுவான பதிலடி தரப்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - madurai,இந்தியா
04-செப்-202214:41:00 IST Report Abuse
Anand ஏழு கோடி மக்கள் உள்ள நாடு பிரிட்டன் நாம் நூற்று முப்பது கோடி பெருமை பட ஒன்றும் இல்லை
Rate this:
Cancel
04-செப்-202200:43:07 IST Report Abuse
அஜய் நம் நாட்டின் நல்ல நேர்மையான தலைவன் மோடி ஜி அவர்களின் முயற்சியால் நாம் முன்னேறி வருகிறோம். இதை எல்லோரும் நேர்மையா ஏற்றுக்கொண்டு ஆகவேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-செப்-202220:37:56 IST Report Abuse
Ramesh Sargam மோடி ஆட்சி அமைத்தவுடன், இந்தியாவை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அடக்கி ஆண்ட காங்கிரஸ் கட்சியையும் வென்று முந்தியுள்ளோம். இந்த முன்னேற்றம் தொடரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X