மூதாட்டியை புடவை கட்டிபோட்டுவிட்டு: 15 சவரன் தங்க நகை கொள்ளை

Added : செப் 03, 2022 | |
Advertisement
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மேல்மல்லப்பள்ளி குண்டன்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி அமராவதி (வயது 60) இவரது மகன் தேவராஜ் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அமராவதி கணவர் இறந்த விட்டதால் மூதாட்டி தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் யாரோ

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மேல்மல்லப்பள்ளி குண்டன்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி அமராவதி (வயது 60) இவரது மகன் தேவராஜ் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அமராவதி கணவர் இறந்த விட்டதால் மூதாட்டி தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் யாரோ நேற்று(செப்02) நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்து தனியாக உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கை, கால்களை கட்டிபோட்டுவிட்டு கழுத்தில் அணிந்திருந்த நகைகளை எடுத்து உள்ளனர்.அதன் பிறகு மர்ம ஆசாமிகள் மூதாட்டின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த பீரோ உடைத்து அதிலிருந்து 15 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று(செப்03) காலை அப்பகுதி பொது மக்கள் நிலத்திற்கு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மூதாட்டி புடவையால் வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்டு நிலையில் மயங்கி கிடந்த மூதாட்டி கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த மூதாட்டியை சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை பணம் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X