அரசு கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை:அரசு கல்லுாரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில், முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும், பல பாடப் பிரிவுகளில் மாணவர்கள், தங்களுக்கு இடங்கள் கேட்டு,

சென்னை:அரசு கல்லுாரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில், முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனாலும், பல பாடப் பிரிவுகளில் மாணவர்கள், தங்களுக்கு இடங்கள் கேட்டு, கல்லுாரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில், அரசு கல்லுாரிகளில் ஏற்கனவே அனுமதிக்கப் பட்ட இடங்களை விட, கூடுதலாக 20 சதவீத இடங்களில், இளநிலை பட்டப் படிப்புக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என, தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

இதற்கான அரசாணையை, உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்து உள்ளார்.அதேபோல, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லுாரிகளில் 10 சதவீதமும் கூடுதல் இடங்களில் மாணவர்களை சேர்க்கலாம் என அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.இந்த சேர்க்கைக்கு, சம்பந்தப்பட்ட கல்லுாரிகள், தங்களின் இணைப்பு அந்தஸ்து வழங்கும் பல்கலைகளில் அனுமதி பெற வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X