மீண்டும் இந்தியாவில் நுழையும் 'லாம்ப்ரெட்டா' ஸ்கூட்டர்

Added : செப் 03, 2022 | |
Advertisement
புதுடில்லி:இத்தாலிய ஸ்கூட்டர் பிராண்டு ஆன 'லாம்ப்ரெட்டா', புதிய அவதாரத்துடன் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது.ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த லாம்ப்ரெட்டா, தற்போது 'பேர்டு மொபிலிட்டி' எனும் நிறுவனத்தின் கூட்டுடன், இந்தியாவுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.இதற்காக இந்த நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,600 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொள்ள
மீண்டும், இந்தியாவில், நுழைகிறது, 'லாம்ப்ரெட்டா' ஸ்கூட்டர்

புதுடில்லி:இத்தாலிய ஸ்கூட்டர் பிராண்டு ஆன 'லாம்ப்ரெட்டா', புதிய அவதாரத்துடன் இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது.

ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த லாம்ப்ரெட்டா, தற்போது 'பேர்டு மொபிலிட்டி' எனும் நிறுவனத்தின் கூட்டுடன், இந்தியாவுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.இதற்காக இந்த நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,600 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.முதலில் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்களுடன் சந்தைக்கு வரும் இந்நிறுவனம், 2024ல், மின்சார ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து, உலகளவில் இந்த பிராண்டை வைத்திருக்கும் இன்னோசென்டி எஸ்.ஏ., நிறுவனத்தின் உரிமையாளர், வால்டர் ஷெப்ரான் கூறியதாவது:இந்த பிராண்டின் ஆன்மா இந்தியாவில் உள்ளது. அது மக்களின் மனம் கவர்ந்த ஒன்று. கடந்த கால நிலையை மீண்டும் உருவாக்க விரும்புகிறோம். அதிக சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிறுவனம், இந்தியாவில் உற்பத்தியை மேற்கொண்டு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டில், லாம்ப்ரெட்டா உலளவில் ஒரு லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் 70 நாடுகளில் விற்பனையை மேற்கொண்டு வருகிறது.இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களை தயாரிக்கும் விதத்தில், மிகப் பெரிய ஆலையை, மானேசரில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X