'காலிப் பைகளுடன் காணும் கனவு வெற்றி பெறும்'

Added : செப் 03, 2022 | |
Advertisement
புதுடில்லி:'ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்' என, இளைஞர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் 'ஏர்டெல்' நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் அறிவுரை வழங்கி உள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுனில் மிட்டல், தொழில்முனைவோருக்கு பல ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:காலிப் பைகளுடன் காணும் கனவு வெற்றி பெறும் என்பதற்கு நான் ஒரு வாழும்
'காலி பைகள், காணும்,கனவு,வெற்றி பெறும்'

புதுடில்லி:'ஒருபோதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்' என, இளைஞர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் 'ஏர்டெல்' நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் அறிவுரை வழங்கி உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுனில் மிட்டல், தொழில்முனைவோருக்கு பல ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:காலிப் பைகளுடன் காணும் கனவு வெற்றி பெறும் என்பதற்கு நான் ஒரு வாழும் உதாரணம்.

நாம் அனைவரும் பெரிய கனவுகளைக் காண வேண்டும்; வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட வேண்டும். நீங்கள் வியாபாரமோ அல்லது செல்வத்தை உருவாக்கவோ எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள். ஆனால் எதுவாக இருந்தாலும், நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்யுங்கள்.

உங்களுக்கு நிறைய செல்வம், புகழ் கிடைக்கலாம். ஆனால், உங்களுக்கு ஒவ்வாத ஒன்றில், உங்களை பொருத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் கனவுகளை செயல்படுத்துங்கள், அது சுவாரஸ்யமாக மாறும்.நான் ஒரு டாக்டரோ, வழக்கறிஞரோ அல்லது பொறியாளரோ கூட இல்லை. ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது என் கனவு. அதை அடைய, நான் சொந்தமாக ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. நம் நாட்டில் இத்தகைய வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

சுனில் மிட்டல் அவரது தந்தையிடம் கடன் வாங்கி, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன், 18 வயதில் 'பார்தி என்டர்பிரைசஸ்' நிறுவனத்தை துவக்கினார்.முதலில் மிதிவண்டி தயாரிப்பில் இறங்கி, பின் வேறு பல துறைகளிலும் கால் பதித்தார். 1995ல் தொலைதொடர்பு துறையில் நுழைந்து இன்று உயர்ந்த இடத்தை எட்டியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X