செந்நாய்கள் கடித்து 23 ஆடுகள் பலி

Added : செப் 03, 2022 | |
Advertisement
ஓசூர்:ஜவளகிரி அருகே செந்நாய்கள் கடித்து குதறியதில், 23 ஆடுகள் பலியாகின.கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி அடுத்த சூளகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாதேஷ் மனைவி மஞ்சுளா, 40, மற்றும் கிருஷ்ணப்பா, 45; இவர்கள் தங்களது வீட்டின் அருகில் தனித்தனியாக கொட்டகை அமைத்து, தலா, 30 ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.கொட்டகையை மஞ்சுளா பார்த்தபோது, 30 ஆடுகளில், இரு வெள்ளாடுகள் மற்றும் 18 செம்மறி

ஓசூர்:ஜவளகிரி அருகே செந்நாய்கள் கடித்து குதறியதில், 23 ஆடுகள் பலியாகின.கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி அடுத்த சூளகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாதேஷ் மனைவி மஞ்சுளா, 40, மற்றும் கிருஷ்ணப்பா, 45; இவர்கள் தங்களது வீட்டின் அருகில் தனித்தனியாக கொட்டகை அமைத்து, தலா, 30 ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

கொட்டகையை மஞ்சுளா பார்த்தபோது, 30 ஆடுகளில், இரு வெள்ளாடுகள் மற்றும் 18 செம்மறி ஆடுகள், கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் காயத்துடன் இறந்து கிடந்தன. கிருஷ்ணப்பா கொட்டகையிலிருந்த இரு செம்மறி ஆடுகள் காயத்துடன் இறந்து கிடந்தன. ஜவளகிரி வனச்சரகர் சுகுமாரன் தலைமையில் சென்ற, ஜவளகிரி கால்நடை மருத்துவர் பாரதிதாசன், இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார்.

அப்பகுதியிலிருந்த காலடி தடயங்களை ஆராய்ந்தபோது, உளிபெண்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய நான்கு செந்நாய்கள் கூட்டம், 23 ஆடுகளை கடித்துக் கொன்றது தெரிந்தது.இறந்த ஆடுகளுக்கு தலா, 3,000 ரூபாய் இழப்பீடு வழங்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். செந்நாய்கள் கூட்டத்தை கண்காணிக்க, வனவர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மீண்டும் செந்நாய்கள் கிராமத்திற்குள் புகுந்து விடாமல் தடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X