'ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்' பயன் பெறாத பிற மாநிலத்தவர்

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், பிற மாநிலங்களைச் சேர்ந்த கார்டுதாரர்கள் அதிகம் பயன் பெறாமல் உள்ளனர். இதற்கு, அத்திட்டம் குறித்து அவர்களிடம் தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா அல்லது அவர்கள் ஆர்வம் காட்டவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.மத்திய அரசு, புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக ஒரே நாடு, ஒரே

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், பிற மாநிலங்களைச் சேர்ந்த கார்டுதாரர்கள் அதிகம் பயன் பெறாமல் உள்ளனர். இதற்கு, அத்திட்டம் குறித்து அவர்களிடம் தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா அல்லது அவர்கள் ஆர்வம் காட்டவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசு, புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெறுவதற்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்திஉள்ளது. அத்திட்டத்தின் வாயிலாக தமிழக ரேஷன் கார்டுதாரர்கள், இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் அரிசி, கோதுமை, சர்க்கரை வாங்கலாம். அதேபோல், பிற மாநிலத்தவர்கள் தமிழக ரேஷன் கடைகளில் வாங்கலாம்.

ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம், 2020 அக்., 1ல் இணைந்தது. தமிழகத்தில் கட்டுமானம், உணவகம், பெட்ரோல் பங்க், சலுான் என, அனைத்து தொழில்களிலும் ஜார்க்கண்ட், பீஹார், உ.பி., என, பிற மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். இருப்பினும், தமிழக ரேஷன் கடைகளில் ஆக., மாதம் பிற மாநிலங்களைச் சேர்ந்த, 508 கார்டுதாரர்கள்; ஜூலையில் 327; ஜூனில் 237; மே மாதம் 311; ஏப்ரலில் 370 கார்டுதாரர்கள் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்கியுள்ளனர்.

அதேநேரத்தில் மேற்கண்ட மாதங்கள் முறையே, 607; 476; 464; 471; 490 என, தமிழகத்தைச் சேர்ந்த கார்டுதாரர்கள், பிற மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கியுள்ளனர். தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் மிக அதிகளவில் வசித்தும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்காமல் இருப்பதற்கு, ஒரே ரேஷன் திட்டம் குறித்து, அவர்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணம் என தெரிகிறது.

இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொழிலாளர் நலத் துறையுடன் இணைந்து, வட மாநிலத்தவர்கள் தங்கியுள்ள இடங்களில், ஒரே ரேஷன் திட்டம் குறித்து அடிக்கடி விளக்கப்பட்டு வருகிறது. அப்படியும் அவர்கள் பொருட்கள் வாங்க வருவதில்லை. பிற மாநிலத்தவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம், ரேஷன் கார்டை கொடுத்துவிட்டு, அவர்கள் மட்டுமே தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். இதனால் தான் அவர்கள் தமிழகத்தில் பொருட்கள் வாங்காமல் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X