சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பி வெளியேறும் உபரி நீர்

Added : செப் 03, 2022 | |
Advertisement
ஊத்துக்கோட்டை:தண்ணீர் நிறைந்து காணப்படும் சிட்ரபாக்கம் அணைக்கட்டில், சமீபத்தில் பெய்த பலத்த மழையால், உபரி நீர் வெளியேறி வருகிறது.ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி வழியே, பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.இங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், கல்பட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு வழியே, பழவேற்காடு வரை
சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பி வெளியேறும் உபரி நீர்

ஊத்துக்கோட்டை:தண்ணீர் நிறைந்து காணப்படும் சிட்ரபாக்கம் அணைக்கட்டில், சமீபத்தில் பெய்த பலத்த மழையால், உபரி நீர் வெளியேறி வருகிறது.

ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி வழியே, பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.இங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், கல்பட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு வழியே, பழவேற்காடு வரை பாய்ந்து கடலில் கலக்கிறது.தமிழகத்தில், ஊத்துக்கோட்டை அடுத்த, சிட்ரபாக்கம் பகுதியில், 1989ம் ஆண்டு அணைக்கட்டு கட்டப்பட்டது.

கடந்தாண்டு பெய்த மழையால் நீர் நிறைந்த காணப்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் உபரி நீர் வெளியேறி வருகிறது.தற்போது, இந்த அணைக்கட்டில் நிரம்பி உள்ள நீரால், சுற்றியுள்ள மூன்று கி.மீட்டர் துாரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்னை இன்றி உள்ளது.உபரி நீர் வெளியேறி வரும் நிலையில், சிலர் வலை போட்டு மீன் பிடித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X