ரேஷன் கடை கட்டடம் சேதம்ஊழியர்கள், மக்கள் அச்சம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
பவுஞ்சூர்:சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டடத்தால், ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்கள் அச்சமடைந்துள்ளனர்.பவுஞ்சூர் அடுத்த தண்டரை ஊராட்சி, பொறஞ்சேரி கிராமத்தில், பொய்கைநல்லுார், பொறஞ்சேரி கிராமங்களுக்கான ஒருங்கிணைந்த ரேஷன் கடை உள்ளது. 253 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்
ரேஷன் கடை கட்டடம் சேதம்ஊழியர்கள், மக்கள் அச்சம்

பவுஞ்சூர்:சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டடத்தால், ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்கள் அச்சமடைந்துள்ளனர்.

பவுஞ்சூர் அடுத்த தண்டரை ஊராட்சி, பொறஞ்சேரி கிராமத்தில், பொய்கைநல்லுார், பொறஞ்சேரி கிராமங்களுக்கான ஒருங்கிணைந்த ரேஷன் கடை உள்ளது. 253 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், சீரமைப்பு பணி எதுவும் நடக்கவில்லை. இதனால், கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கூரையின் சிமென்ட் காரைகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது.மேலும், விரிசல் அடைந்து ஓட்டை ஏற்பட்டுள்ள சுவர் வழியாக விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள், கடைக்குள் வந்து தஞ்சம் அடைவதால், பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர். பொருட்கள் வாங்க குடும்ப அட்டைதாரர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகுவதால் கடையில் உள்ள அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைந்து வீணாகின்றன.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த ரேஷன் கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X