இளைஞர்கள் சுய தொழில் துவங்கவேண்டும்: அமைச்சர் அன்பரசன்

Added : செப் 03, 2022 | |
Advertisement
கரூர்:''படித்த இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்க முன் வர வேண்டும்,'' என, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 13வது உச்சி மாநாடு, மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில், கரூரில் நடந்தது.தொழில் நிறுவனங்கள் தொடர்பான கண்காட்சியை திறந்து வைத்த, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

கரூர்:''படித்த இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்க முன் வர வேண்டும்,'' என, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 13வது உச்சி மாநாடு, மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில், கரூரில் நடந்தது.தொழில் நிறுவனங்கள் தொடர்பான கண்காட்சியை திறந்து வைத்த, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தக் கூடிய துறை தான், சிறு, குறு தொழில் வளர்ச்சி துறை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சுதந்திர நாதன் தலைமையில் கமிட்டி அமைத்து, அதன் பரிந்துரைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.இத்துறையில் கிராமப்புற பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இந்திய அளவில், தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தொழில் கடன் உதவியில், 86 சதவீதம் இந்த துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் வங்கிக் கடன் எளிதாகப் பெற, 100 கோடி ரூபாய் நிதியில், கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.ஒரு வாரத்தில், 81 தொழில் நிறுவனங்களுக்கு, 2 கோடியே 15 லட்சம் ரூபாய் உத்தரவாதத்துடன் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளிடம் கடன் பெற்ற நிறுவனங்கள், 161 நாளில் பணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு பணம் செலுத்தும் திட்டம் உள்ளது.இதன் வாயிலாக, மூன்று நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர், உரிமம் பெறும் திட்டம் எளிமையாக்கப்பட்டு, 9,415 பேருக்கு வழங்கப் பட்டு உள்ளது. படித்த இளைஞர்கள், சொந்தமாக தொழில் துவங்க முன் வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும், 10 ஆயிரம் தொழில் முனைவோரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஓராண்டில், 11 ஆயிரத்து 147 தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், 62 தொழிற்பேட்டையில் உள்ள இடங்களுக்கு, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தொழிற்பேட்டையில் உள்ள மனைகளை குறைந்த விலையில் விற்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X