சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கடவுளுக்கே வெளிச்சம்!

Added : செப் 03, 2022 | |
Advertisement
கடவுளுக்கே வெளிச்சம்!'எனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சதி நடக்கிறது...'என்று கண்களை கசக்குகிறார், கர்நாடகா முன்னாள்முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா.இம்மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கஉள்ள நிலையில், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்பதில், காங்.,


அக்கம் பக்கம்


கடவுளுக்கே வெளிச்சம்!



'எனக்கு எதிராக கட்சிக்குள்ளேயே சதி நடக்கிறது...'என்று கண்களை கசக்குகிறார், கர்நாடகா முன்னாள்முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா.இம்மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கஉள்ள நிலையில், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்பதில், காங்., தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், சித்தராமையாவுக்கும், மாநில காங்., தலைவர் சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி
நிலவுகிறது.இருவரும் மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, தங்கள் ஆதரவை பெருக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் சித்தராமையா, குடகு மாவட்டத்தில்சுற்றுப் பயணம் செய்தார். அவரை வரவேற்க திரண்டிருந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், சித்தராமையா கார் மீது முட்டையை வீசினார். அந்த நபர், பா.ஜ.,வைச் சேர்ந்தவர் என காங்., தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், 'அவர்
காங்கிரசைச் சேர்ந்தவர் தான். சித்தராமையா தொடர்ந்து ஹிந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை கூறுவதால், ஆத்திரம் அடைந்து முட்டையை வீசினார்...' என, பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.'எதிர்க்கட்சியினரை விட, எங்கள் கட்சியினர் தான், என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட பெரிதும் மெனக்கெடுகின்றனர். எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்...' என புலம்புகிறார், சித்தராமையா.


நன்றாக பொழுது போகிறது!



'மழை விட்டும் துாவானம் விடாத கதையாக இருக்கிறதே...' என்று புலம்புகின்றனர், பீஹார் மாநில அரசியல்வாதிகள். இங்கு முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக உள்ளார். ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சியின் போது, துணை முதல்வராக இருந்தவர் பா.ஜ.,வின் சுஷில் குமார் மோடி. இவருக்கும், நிதிஷ் குமாருக்கும் ஏழாம் பொருத்தம்.
நிதிஷ் குமாரின் கட்டாயத்தால் தான், சுஷில் குமார் மோடியை, மாநில அரசியலில் இருந்து அகற்றி, ராஜ்யசபா எம்.பி.,யாக்கியது பா.ஜ., மேலிடம். இப்போது கூட்டணி முறிந்து விட்டதால், பழைய பகையை மீண்டும் கையில் எடுத்துள்ள சுஷில் குமார் மோடி, நிதிஷ் குமாரையும், தேஜஸ்வி யாதவையும்
கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். பதிலுக்கு, நிதிஷ் - தேஜஸ்வி கூட்டணியும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுஷில் குமாரை வறுத்தெடுக்கின்றனர். சமீபத்தில், 'பாட்னாவில் இரண்டு மிகப் பெரிய, 'ஷாப்பிங் மால்கள்' சுஷில் குமாரின் குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்டு உள்ளன. இதற்கான பணம் அவருக்கு எப்படி வந்தது...' என, தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பினார்.
இதில், கடுப்பான சுஷில் குமார், 'இந்த குற்றச்சாட்டுகளை நிரூபித்து விட்டால், இரண்டு ஷாப்பிங் மால்களும் நிரூபித்தவர்களுக்கே பரிசாக அளிக்கப்படும்...' என, பதிலுக்கு பாய்ந்தார். இதைப் பார்த்த பீஹார் மக்கள், 'அரசியல்வாதிகளின் அக்கப் போரால், நமக்கு நன்றாக பொழுது போகிறது...' என, கிண்டலடிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X