சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: 'ஆந்திராவின் விஜயவாடா துறைமுகத்தில் இருந்து, தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன' என்பதை, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டிலிருந்து அமைச்சர் பொன்முடி படித்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில், விஜயவாடாவில் துறைமுகம் மட்டுமல்ல, கடலே இல்லை என்பதே உண்மை.டவுட் தனபாலு: அடடா...வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்று, கல்லுாரியில்

'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: 'ஆந்திராவின் விஜயவாடா துறைமுகத்தில் இருந்து, தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன' என்பதை, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டிலிருந்து அமைச்சர் பொன்முடி படித்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில், விஜயவாடாவில் துறைமுகம் மட்டுமல்ல, கடலே இல்லை என்பதே உண்மை.

டவுட் தனபாலு: அடடா...வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்று, கல்லுாரியில் பேராசிரியரா இருந்த பொன்முடியே பூகோளத்தில் சறுக்கி அசிங்கப்பட்டுட்டாரே... கடும் கோபக்காரரான பொன்முடிக்கு, குறிப்பு எழுதித் தந்தவரின் முதுகு, இந்நேரம்புண்ணாகாம இருக்குமா என்பது தான் எங்க, 'டவுட்!'

பத்திரிகை செய்தி: அரசு கல்லுாரிகளில் கூடுதலாக, 20 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 15 சதவீதமும், சுயநிதி கல்லுாரிகளில், 10 சதவீதமும் கூடுதல் மாணவர்களை சேர்க்கலாம் என்றும் அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

டவுட் தனபாலு: மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அனுமதிப்பது நல்ல விஷயம் தான்... அதே நேரம், கல்லுாரிகளில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துறதுலயும் அரசு அக்கறை காட்டுனா, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் விளை பொருட்களை நல்ல விலையில் கொள்முதல் செய்வதற்கான நடைமுறை உருவாக்கப்படும்.

டவுட் தனபாலு: இதைத் தான் சகவாச தோஷம் என்பர்... தமிழக முதல்வர் ஸ்டாலினோட நீங்க அதிகமா ஒட்டி உறவாடும் போதே, இந்த மாதிரி இலவச திட்டங்களை எடுத்து விடுவீங்க என்ற, 'டவுட்' எழுந்தது... அதை உறுதிப்படுத்திட்டீங்களே!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி என்பதற்கு, உயர் நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. சட்டப்படி பொதுக்குழு நடந்ததாக தீர்ப்பு வந்துள்ளதால், கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும். அரசியலில் பன்னீர்செல்வம் எதிர்காலம் இனி, 'ஜீரோ!'

டவுட் தனபாலு: பன்னீர்செல்வம் எதிர்காலத்தை கணிக்கிறதுல உங்களுக்கு ஏன் இந்த ஆர்வம்...? 'ஜீரோ' இல்லாமல் கணக்கே இல்லையே... ஒரு பக்கத்துல ஜீரோக்கள் சேர, சேர அதன் மதிப்பு எந்த அளவுக்கு உயரும் என்பது, மூத்த அரசியல்வாதியான தங்களுக்கு தெரியாதா என்பது தான் எங்க, 'டவுட்!'


கோவை கலெக்டரிடம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்துள்ள மனு:
மற்ற மாவட்டங்களில், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் அரசு திட்டங்களுக்கு பூஜை போடுகின்றனர். கோவை மாவட்டத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை அழைக்காமல், மருதமலை கோவில் மண்டபத்துக்கு பூஜை போட்டுள்ளனர். எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்களை அழைக்காமல், தி.மு.க., பகுதி செயலரை வைத்து நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இப்படி இருந்தால், மக்கள் எங்களை எப்படி மதிப்பர்?

டவுட் தனபாலு: மக்கள், தப்பித் தவறி உங்களை மதிச்சுடக் கூடாதுன்னு தானே, தி.மு.க.,வினர் திட்டமிட்டு காரியம் ஆற்றுகின்றனர்... ஒரு காலத்துல நீங்க செஞ்சதை, உங்களுக்கு அவங்க திருப்பி செய்றாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: தமிழகத்தில், 11 புதிய மருத்துவ கல்லுாரிகளில், 1,450; கோவை மருத்துவ கல்லுாரியில் கூடுதலாக, 50 இடங்கள் என, புதிதாக, 1,500 மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டிய அவசியம் குறித்து, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

டவுட் தனபாலு: மத்திய அரசு, தமிழகத்துக்கு எவ்வளவோ திட்டங்களை தந்துட்டு தான் இருக்குது... ஆனாலும், உங்க கட்சியினர், 'எதுவும் செய்ய மாட்டேங்குது'ன்னு அடிக்கடி குறை சொல்வது அரசியலுக்காகத் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
06-செப்-202216:16:21 IST Report Abuse
raja எங்கிருக்குன்னே தெரியாதே ....
Rate this:
raja - Cotonou,பெனின்
06-செப்-202217:44:04 IST Report Abuse
rajaவிஜயவாடா எங்கிருக்குன்னே தெரியாத விடியாமூஞ்சி கோமாளி துக்ளக்கின் மங்குனி அமைச்சன் தமிழர்களின் தலையெழுத்து .......
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
04-செப்-202217:25:12 IST Report Abuse
Raj போதை பொருளை கைப்பற்றும் போலீசை விட கடத்தும் கடத்தல் காரர்களுக்கே அதன் முழுவிபரமும் தெரியும் என்பது தெளிவாகிறது
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
04-செப்-202211:17:56 IST Report Abuse
suresh kumar 'விசாகப்பட்டினம்' என்பதை தவறுதலாக அவசரத்தில் 'விஜயவாடா' என வாசித்திருக்கலாம். எப்படி இருந்தாலும், தமிழக காவல்துறையை மீறி தமிழக எல்லைக்குள் வந்து விற்பனை செய்யப்படுகிறது. இது தமிழக காவல்துறையின் தோல்வி.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
04-செப்-202215:33:48 IST Report Abuse
கல்யாணராமன் சு.நீங்கள் சொல்வது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே .... ஆனால் அமைச்சர் குஜராத் முந்திரா துறைமுகத்திலிருந்து விஜயவாடா துறைமுகம் என்று சொல்கிறார் .... முந்திரா இருப்பது மேற்கில் விஜயவாடா/விசாகப்பட்டினம் இருப்பது கிழக்கில் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X