சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ரஜினியை விமர்சிக்காதீர்: தி.மு.க., உத்தரவு!

Added : செப் 03, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
ரஜினியை விமர்சிக்காதீர்: தி.மு.க., உத்தரவு!''தன்னோட சேக்காளியை காப்பாத்திட்டு இருக்காரு வே...'' என, கருப்பட்டி காபிக்கு ஆர்டர் செய்தபடியே, மேட்டரை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''சேலம் மாவட்டம், ஏற்காடு அரங்கம் வனப்பகுதியில தனியாருக்கு பாதை போடுறதுக்காக, 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி தள்ளிட்டாவ... அந்தப் பகுதி


டீ கடை பெஞ்ச்


ரஜினியை விமர்சிக்காதீர்: தி.மு.க., உத்தரவு!''தன்னோட சேக்காளியை காப்பாத்திட்டு இருக்காரு வே...'' என, கருப்பட்டி காபிக்கு ஆர்டர் செய்தபடியே, மேட்டரை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சேலம் மாவட்டம், ஏற்காடு அரங்கம் வனப்பகுதியில தனியாருக்கு பாதை போடுறதுக்காக, 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி தள்ளிட்டாவ... அந்தப் பகுதி வனத்துறையினருக்கு கணிசமா பணம் போயிட்டதால, அவங்களும் கண்டுக்கல வே...

''இது பிரச்னையாகிட்டதால, லோக்கல் வனத்துறையினருக்கு உயர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினாவ... சேர்வராயன் வடக்கு வனச்சரகத்தை சேர்ந்த நாலு பேர் விளக்கமும்
குடுத்தாவ வே...

''இது சம்பந்தமான விசாரணை அறிக்கையும் உயர் அதிகாரிக்கு போயிட்டு... ஆனாலும், நாலு பேர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம, உயர் அதிகாரி லேட்
பண்ணுதாரு வே...

''ஏன்னா, அந்த நாலு பேர்ல ஒருத்தர், அவரது காலேஜ் சேக்காளியாம்... மத்தவங்க தரப்பில இருந்து, அதிகாரிக்கு பணமும் போயிட்டதால, நடவடிக்கை கிணத்துல போட்ட கல்லாயிட்டு வே...'' என்றார் அண்ணாச்சி.

''பரசுராமமூர்த்திக்கு பக்கபலமா பெரியசாமி இருக்கிற வரைக்கும், கவலையே இல்லை பா...'' என, மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த அன்வர்பாய், ''இப்போதைக்கு யாரும், அவரைப் பத்தி பேசாதீங்கன்னு வாய்ப்பூட்டு போட்டிருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''யாரைப் பத்தி, யார் பேசக் கூடாதாம்...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கவர்னர் ரவியை நடிகர் ரஜினி பார்த்து பேசிட்டு வந்த பிறகு, அவரது அரசியல் பயணம் தொடர்பா பல தகவல்கள் உலா வந்துட்டு இருக்கே... இந்த சந்திப்பை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் பலரும் விமர்சனம் செஞ்சாங்க பா...

''வர்ற 2024 லோக்சபா தேர்தல்ல மோடி மீண்டும் பிரதமர் ஆகணும்னு, ரஜினி நேரடி பிரசாரத்துல இறங்குவார்னு இப்ப ஒரு
தகவல் உலா வருது...

''அதனால, 'அவர் பிரசாரத்துக்கு வந்தா, அப்ப பார்த்துக்கலாம்... இப்போதைக்கு அவரை விமர்சனம் பண்ணி, கட்சி நிர்வாகிகள், சமூக வலைதளங்கள்ல எந்த பதிவுகளும், கருத்துக்களும் பதிவிடக் கூடாது'ன்னு தி.மு.க., தலைமை உத்தரவு போட்டிருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''அண்ணாச்சி, கடந்த 30ம் தேதி, அ.தி.மு.க., மாவட்டச் செயலர் மேல சந்தேக பார்வை விழுந்துருச்சுன்னு ஒரு தகவல் சொன்னீங்கள்ல... ஞாபகம் இருக்காங்க...'' என கடைசி தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''பழனிசாமி அணியில் ஊடுருவிய 'ஸ்லீப்பர் செல்' தகவல் தானே வே...'' என்றார் அண்ணாச்சி.

''ஆமாம்... அதுல, சென்னை வேளச்சேரி, மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க.,வினர் பத்தி சொல்லியிருந்தீங்க... அதுல அசோக் தரப்பினர், அந்த செய்தியில் சொன்னா மாதிரி நடக்கலைன்னு சொல்லுறாங்க...

''அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தலைமையை தான் எல்லாரும் விரும்புறோம்... மாவட்ட, பகுதி, வட்டம் என எல்லா நிர்வாகிகளும் ஒற்றுமையாக, பழனிசாமி தலைமையில் செயல்படுறோம்ன்னு சொல்லியிருக்காங்க...

''பழனிசாமியோட இருக்குறது புடிக்காம, எங்களைப் பத்தியும், எங்க ஆதரவாளர்கள் பத்தியும், யாரோ தப்பா சொல்லுறாங்கன்னு வருத்தப்படுறாங்க...'' என முடித்தார்,
அந்தோணிசாமி.

''பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையே நடக்குற ஆட்டத்துல பாதிக்கப்படுறது, கட்சி நிர்வாகிகள் தான் பா...'' என்றபடியே அன்வர்பாய் நடையை கட்ட,
மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.

*****************


அடாவடி புள்ளிக்கு ஆளுங்கட்சியில் மீண்டும் பதவி?கிரீன் டீயை பருகியபடியே, ''தனியார் கல்லுாரி தயவுல, கிளார்க் ஒருத்தர் கோடிக்கணக்குல சொத்துக்களை குவிச்சிட்டு இருக்காருங்க...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தண்டலம் ஊராட்சி எல்லையில, 40 தொழிற்சாலைகள், நாலு கல்லுாரிகள் இருக்குது...

''பிரபல மருத்துவ கல்லுாரியானது, அரசுக்கு சொந்தமான நிலங்கள், தாங்கல் ஏரியை ஆக்கிரமிச்சிருக்குது... இந்த தகவல் வெளியே தெரியாம இருக்கிறதுக்காக, ஊராட்சி அதிகாரிக்கு வருஷா வருஷம் கணிசமான தொகையை வெட்டுதுங்க...

''இந்த பணத்துல அந்த அதிகாரி, திருவேற்காடுல 2 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி பங்களா கட்டியிருக்கார்... தண்டலம் அய்யப்பா நகர்ல, தலா 30 லட்சம் மதிப்புல ரெண்டு பிளாட் வாங்கி போட்டிருக்காருங்க...

''வருவாய் தடைபடக் கூடாதுன்னு, இடமாற்றம் வராம இருக்க, உயர் அதிகாரிகளையும் அப்பப்ப, 'கவனிச்சு' அனுப்பிடுறாரு... இதனால, 20 வருஷமா அங்கயே டேரா போட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''வாங்க ரமேஷ்... சவீதா கல்யாணத்துக்கு போயிட்டு வந்துட்டீரா...'' என, நண்பரிடம் விசாரித்த குப்பண்ணாவே, ''கட்சி நிதி கேட்டு கட்டாயப்படுத்தறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''ஆளுங்கட்சியினரா தான் இருக்கும்... மேல சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''பெரிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குற பணிகளை, சி.எம்.டி.ஏ., கவனிக்கறது... 10 ஆயிரத்து, 763 சதுர அடிக்கு மேல உள்ள கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்க, மெம்பர் செகரட்டரிக்கு அதிகாரம் குடுத்திருக்கா ஓய்...

''சில மாதங்களா, பெரிய கட்டுமான திட்டங்களுக்கான கோப்புகள்இறுதி கட்டத்துக்கு நகர மாட்டேங்கறது... என்னன்னு விசாரிச்சா, 'பார்ட்டி பண்டு' என்ற கட்சி நிதி வராததால, கோப்புகள் நிலுவையில இருக்கறதா, பில்டர்களுக்கு தகவல் வரது ஓய்...

''சதுர அடிக்கு, 27 ரூபாய்னு கணக்கு போட்டு, போன்ல ஒரு தொகையை சொல்றா... அவா சொல்ற இடத்துல போய் பணத்தை குடுத்துட்டா, மறுநாளே, 'அப்ரூவல்' ஆகிடும்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ஆளுங்கட்சியினர் அடாவடி பத்தி நானும் ஒரு தகவல் சொல்றேன் பா...'' என, கடைசித் தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவரா இருக்கிறவர், மதுரவாயல் வடக்கு பகுதி தி.மு.க., நிர்வாகியாகவும் இருக்காரு... தனியார் கட்டுமான உரிமையாளர்களை, அடியாட்களை அனுப்பி மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கையை கச்சிதமா செய்றாரு பா...

''இது சம்பந்தமா, கட்டுமான உரிமையாளர்கள் தரப்புல இருந்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியிருக்காங்க...

''அதுவும் இல்லாம, குண்டர்களை வச்சு, சமூக ஆர்வலரை தாக்கியது, நொளம்பூர் பகுதி ஆளுங்கட்சி ஊராட்சி புள்ளிகளுடன் சேர்ந்து, 202 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், ஊர் குளத்தை ஆக்கிரமிச்சு பத்திரப்பதிவு செஞ்சதுன்னு இவர் மேல வண்டி, வண்டியா புகார், வழக்குகள் இருக்குது...

''ஆனாலும், அமைச்சர் தயவுல மறுபடியும் இவருக்கே கட்சியில பதவி வழங்க ஏற்பாடுகள் நடக்குது பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''ஒருவேளை கட்சி பதவிக்கு வரணும்னா, இந்த தகுதிகள் எல்லாம் இருக்கணுமோ, என்னவோ ஓய்...'' என சிரித்தார் குப்பண்ணா.

'ராஜா... ராஜாதி ராஜன், இந்த ராஜா...' என நாயர் கடை ரேடியோவில் பாடல் ஒலிக்க, நண்பர்கள் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimhan - Manama,பஹ்ரைன்
04-செப்-202218:57:02 IST Report Abuse
Narasimhan சன் பிக்சர்ஸ் வருவாய் பாதிக்கப்படுமே
Rate this:
Cancel
04-செப்-202217:58:09 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ரஜினிக்கு எதிராக பேசி, அவர் பி ஜே பி க்கு போய்விடுவார் ஓட்டுக்கள் பிரிவதற்கு காரணமாகிவிடுவார் என்ற பயம் 😱 தான்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-செப்-202216:22:59 IST Report Abuse
vbs manian இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டாமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X