விமானத்தை திருடி சென்று நடு வானில் மிரட்டல் விடுத்த 'பைலட்' கைது

Updated : செப் 04, 2022 | Added : செப் 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மிசிஸிப்பி: அமெரிக்காவில் விமானத்தை திருடிச்சென்ற பைலட் , வால்மார்ட் வர்த்தக கட்டடத்தை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் மிசிஸிப்பி மாகாணம் டுபேலா நகரில் உள்ள விமான நிலையத்தில் 8 பேர் அமரும் சிறிய ரக குட்டி விமானம் நின்றிருந்தது. இதனை மர்ம நபர் திருடி சென்றார்.
US: Pilot threatens to crash plane into Walmart in Mississippi

மிசிஸிப்பி: அமெரிக்காவில் விமானத்தை திருடிச்சென்ற பைலட் , வால்மார்ட் வர்த்தக கட்டடத்தை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் மிசிஸிப்பி மாகாணம் டுபேலா நகரில் உள்ள விமான நிலையத்தில் 8 பேர் அமரும் சிறிய ரக குட்டி விமானம் நின்றிருந்தது. இதனை மர்ம நபர் திருடி சென்றார். விமானத்தில் நடு வானில் பறந்த படி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் பேசினான். அதில் வால்மார்ட் வர்த்தக கட்டடத்தின் மீது விமானத்தை மோத விட்டு தகர்க்கப்போகிறேன் என மிரட்டல் விடுத்தான்.


latest tamil news





இதையடுத்து மிசிஸிப்பி போலீசார் உஷாராகினர். உடனே வால்மார்ட் கட்டடத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் அவசர அவசரமாக வெளியேற்றினர். பின்னர் அந்த மர் நபரிடம் சமரசம் பேசினர்.இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விமானத்தை திருடிச்சென்ற நபர் 29 வயது 'பைலட்' என்பது தெரியவந்தது. வானில் பறந்தபடி சுற்றி வந்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போனதால் வயல் வெளியில் விமானத்தை தரையிறக்கி தப்பியோட முயன்ற பைலட்டை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
04-செப்-202206:13:00 IST Report Abuse
Indhuindian விமானத்தை திருடறதா நம்ம ஆளுகளையே முஷுங்கிடுவான் போல இருக்கே.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-செப்-202222:47:57 IST Report Abuse
Ramesh Sargam அப்பா ஒரு வழியா மிரட்டல் விடுத்த மனிதரை பிடிச்சிட்டாங்க. இல்லையென்றால் அவன் விமானத்தை எங்காவது மோதி பல உயிர்களை பலி வாங்கி இருப்பான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X