பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக சென்னையில் இன்று விழிப்புணர்வு

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை:டாக்டர் காமராஜ் மருத்துவமனையில், இன்று பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடக்கிறது.சர்வதேச பாலியல் சுகாதார தினம் செப்., 4ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக பாலியல் மருத்துவர்கள் சங்கம், இந்திய பாலியல் மருத்துவர்கள் சங்கம், 'ஆகாஷ்' குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில், வடபழநியில் உள்ள டாக்டர் காமராஜ்

சென்னை:டாக்டர் காமராஜ் மருத்துவமனையில், இன்று பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடக்கிறது.

சர்வதேச பாலியல் சுகாதார தினம் செப்., 4ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக பாலியல் மருத்துவர்கள் சங்கம், இந்திய பாலியல் மருத்துவர்கள் சங்கம், 'ஆகாஷ்' குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில், வடபழநியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில், இன்று பாலியல் உரிமை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கம் நடக்கிறது.

காலை 10:30 மணிக்கு, நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் மனித சங்கிலியை துவக்கி வைக்கிறார். பாலியல் உரிமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி விமலா துவக்கி வைக்கிறார்.பாலியல் உரிமைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை, இயக்குனர் வெற்றிமாறன் கையெழுத்திட்டு துவக்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய பாலியல் மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் காமராஜ், ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் ஜெயராணி காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இது குறித்து, இந்திய பாலியல் மருத்துவர்கள் சங்க தலைவர் காமராஜ் கூறியதாவது:பல நாடுகளில், வளரும் இளைஞர்களிடம் பாலியல் தொடர்பாக விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் பள்ளிகளில், 64 சதவீத பெண் குழந்தைகளும், 53 சதவீத ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதை தடுக்க பாலியல் விழிப்புணர்வு கல்வி கொடுக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு நாம் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலும், அவர்களின் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சொல்லி தருவதில்லை. இதனால், பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். இதை வலியுறுத்தி, உலக பாலியல் சுகாதார நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X