ஊத்துக்கோட்டைவாலிபர் உடல் அடக்கம் 

Added : செப் 03, 2022 | |
Advertisement
ஊத்துக்கோட்டை:நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரது மகன் ராபின், 24. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த 1ம் தேதி இரவு, நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, பைக்கில்
ஊத்துக்கோட்டைவாலிபர் உடல் அடக்கம் 

ஊத்துக்கோட்டை:நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரது மகன் ராபின், 24. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த 1ம் தேதி இரவு, நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, பைக்கில் நண்பர் கமல் என்பவருடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். திருவள்ளூர் சாலையில் சென்றபோது, பைக்கில் பின் தொடர்ந்த நான்கு பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ராபினை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

ரத்த வெள்ளத்தில் ராபின் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், கொலையாளிகள் தப்பி ஓடினர். மாவட்ட எஸ்.பி., கல்யாண் உத்தரவின் பேரில், ஆறு தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.குற்றவாளிகளை பிடித்தால் மட்டுமே இறந்தவரின் உடலை பெறுவோம் என, ராபினின் உறவினர்கள் கூறினர்.

இரு தினங்களாக சமரசம் பேசிய நிலையில், உடலை பெற அவர்கள் ஒப்புக் கொண்டனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் இரவு, அடக்கம் செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X