பழவேற்காடு அரசு மருத்துவமனையில்கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்: கலெக்டர்

Added : செப் 03, 2022 | |
Advertisement
பழவேற்காடு:பழவேற்காடு அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.பழவேற்காடு அரசு மருத்துவமனையில், நேற்று, மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளிடம் நலம் விசாரித்து, சேவைகள்

பழவேற்காடு:பழவேற்காடு அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.

பழவேற்காடு அரசு மருத்துவமனையில், நேற்று, மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளிடம் நலம் விசாரித்து, சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வகம், மருத்துவ வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.பின் அவர் தெரிவித்ததாவது: பழவேற்காடு அரசு மருத்துவமனையில், ஆறு மாதங்களுக்கு முன், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தது.இது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது, மருத்துவர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

கூடுதல் செவிலியர்கள் தேவை என்றும், 'எக்ஸ்-ரே' பிரிவு, வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டும் செயல்படுவதாகவும், அனைத்து நாட்களும் செயல்பட வேண்டும் என, பொதுமக்கள் கேட்டனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பழவேற்காடு பகுதியில் உள்ள, 20 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X