எச்.ஐ.வி., பாதித்த பெண்ணுக்கு தொடர் சிகிச்சை:உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Added : செப் 03, 2022 | |
Advertisement
மதுரை:எச்.ஐ.வி., வைரஸ் பாதித்த பெண்ணுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், பள்ளி மாணவியாக இருந்தபோது மூக்கில் ரத்தப் போக்கு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரத்தக்கசிவு நிற்கவில்லை. வேறொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை

மதுரை:எச்.ஐ.வி., வைரஸ் பாதித்த பெண்ணுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், பள்ளி மாணவியாக இருந்தபோது மூக்கில் ரத்தப் போக்கு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரத்தக்கசிவு நிற்கவில்லை. வேறொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஹீமோகுளோபின் மற்றும் தட்டணுக்கள் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அங்கு அப்பெண் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்தார். தனியார் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு, அப்பெண்ணிற்கு செலுத்தப்பட்டது. பின் வீடு திரும்பினார்.

மூக்கிலிருந்து ரத்தப்போக்கு நிற்கவில்லை. மற்றொரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. அப்பெண் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பெண்ணின் தந்தை, 'ரத்தம் ஏற்றப்பட்ட மருத்துவமனை சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரை கலெக்டரிடம் மனு அளித்தார்.

மனு, மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வரை விசாரணை அதிகாரியாக நியமித்தார்.பெண்ணின் தந்தை, 'விசாரணை அதிகாரி முறையாக விசாரிக்கவில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவமனை டாக்டர், ரத்த வங்கியை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும். மருத்துவமனை தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். மகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்' என, உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு:ரத்த வங்கி வழங்கிய ரத்தத்தில் எந்த நோய் தொற்றும் இல்லை என்பதை சரிபார்த்த பின்னரே, மருத்துவமனையில் மனுதாரரின் மகளுக்கு ரத்தம் செலுத்த பயன்படுத்தி உள்ளனர். இது மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்த விசாரணை அதிகாரியின் விசாரணையில் உறுதியானது.

ரத்த வங்கி மீது எவ்வித குற்றச்சாட்டையும் மனுதாரர் முன் வைக்கவில்லை. ரத்த தானம் அளித்த நபர்களை பரிசோதித்ததில், அவர்களுக்கு எச்.ஐ.வி.,தொற்று இல்லை என உறுதியாகி உள்ளது.ரத்த வங்கி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அது சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோய் தொற்று இல்லாத ரத்தத்தை வழங்கியுள்ளது தெளிவாகிறது.

மருத்துவமனை மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.மருத்துவமனையின் கவனக்குறைவு எதுவும் இல்லை என விசாரணை அதிகாரி முடிவுக்கு வந்துள்ளார். அவரது விசாரணை அறிக்கையில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை. மருத்துவமனை, ரத்த வங்கி மீது தவறு இல்லாததால் இழப்பீடு வழங்குவது குறித்த கேள்வி எழவில்லை.எந்த ஒரு தவறும் இன்றி இளம்பெண் எச்.ஐ.வி., வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு முறையான தொடர் சிகிச்சையை வழங்க மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X