பக்தருக்கு ரூ.45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு| Dinamalar

பக்தருக்கு ரூ.45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

Added : செப் 03, 2022 | |
சேலம்:'ரத்து செய்த சேவையை மீண்டும் வழங்க மறுத்தால், 45 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, திருப்பதி தேவஸ்தானத்துக்கு, சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம், அழகாபுரம், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் ஹரிபாஸ்கர். இவர், 2006 ஜூன், 27ல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், 'மேல் சாத்து வஸ்திர சேவை' என்ற தரிசனத்துக்காக, இரண்டு நபர்களுக்கு, 12 ஆயிரத்து, 250 ரூபாய்

சேலம்:'ரத்து செய்த சேவையை மீண்டும் வழங்க மறுத்தால், 45 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, திருப்பதி தேவஸ்தானத்துக்கு, சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், அழகாபுரம், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் ஹரிபாஸ்கர். இவர், 2006 ஜூன், 27ல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், 'மேல் சாத்து வஸ்திர சேவை' என்ற தரிசனத்துக்காக, இரண்டு நபர்களுக்கு, 12 ஆயிரத்து, 250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார்.இதன்படி, அவருக்கு, 2020 ஜூலை, 10ல் நடக்கும் சேவையில் கலந்து கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், அப்போது கொரோனா சூழல் காரணமாக, தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வேறு தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், மேல் சாத்து வஸ்திர சேவைக்கு பதிலாக வேறு 'பிரேக்' தரிசனம் செய்ய தேதி தரப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பணம் செலுத்தி, 14 ஆண்டு காத்திருந்தும் தரிசன வாய்ப்பு அளிக்காதது தேவஸ்தானத்தின் சேவை குறைபாடு என, திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு எதிராக, சேலம் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், ஹரிபாஸ்கர் வழக்கு தொடுத்தார்.

ஆக., 18ல், நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் கணேஷ்ராம், உறுப்பினர் ரமோலா ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஹரிபாஸ்கருக்கு ஓராண்டுக்குள் மேல் சாத்து வஸ்திர சேவை வாய்ப்பு வழங்க வேண்டும். 'இல்லாவிட்டால், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக, 45 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தொகை வழங்க வேண்டும். மேலும், தரிசனத்துக்காக கட்டிய, 12 ஆயிரத்து, 250 ரூபாயை இரண்டு மாதத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X