கண் தானம் மிக அவசியம்'அகர்வால்ஸ்' விழிப்புணர்வு

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை கண் தானத்தை வலியுறுத்தும் வகையில், 'டாக்டர் அகர்வால்ஸ்' கண் மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடந்தது.சென்னை. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் கல்லுாரி மாணவர்கள், டாக்டர்கள், அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் உட்பட
கண் தானம் மிக அவசியம்'அகர்வால்ஸ்' விழிப்புணர்வு

சென்னை கண் தானத்தை வலியுறுத்தும் வகையில், 'டாக்டர் அகர்வால்ஸ்' கண் மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடந்தது.சென்னை. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில், மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் கல்லுாரி மாணவர்கள், டாக்டர்கள், அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இது குறித்து அகர்வால்ஸ் கண் வங்கியில் மருத்துவ இயக்குனர் டாக்டர் பிரீத்தி கூறியதாவது:ஒருவர் செய்யும் கண் தானம், நான்கு பேருக்கு பார்வை திறனை வழங்க முடியும். தானமளிக்கப்படும் கண்களுக்கும், தேவைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. கண் தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 50 வயதுக்கு குறைவானவர்களிடம் பார்வை குறைபாடு அதிகரித்துள்ளது.கண் தானம் அளிப்பதால், பலருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சவுந்தரி, குழும இயக்குனர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X