மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதைக்குவரிசையாக துாண்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்| Dinamalar

மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதைக்குவரிசையாக துாண்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

Added : செப் 03, 2022 | |
சென்னை, மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ ரயில் பாதைக்கு வரிசையாக நுாற்றுக்கணக்கான துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., துாரத்திற்கு 61,843 கோடி ரூபாயில் மெட்ரோ திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சோழிங்கநல்லுார் - மாதவரம் தடத்தில் 47 கி.மீ., துாரத்திற்கு அமைகிறது. மொத்தம் 46 ரயில் நிலையங்கள் அமைகின்றன.
மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதைக்குவரிசையாக துாண்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை, மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ ரயில் பாதைக்கு வரிசையாக நுாற்றுக்கணக்கான துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., துாரத்திற்கு 61,843 கோடி ரூபாயில் மெட்ரோ திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சோழிங்கநல்லுார் - மாதவரம் தடத்தில் 47 கி.மீ., துாரத்திற்கு அமைகிறது. மொத்தம் 46 ரயில் நிலையங்கள் அமைகின்றன. மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் கூட்ரோடு, காமராஜ் கார்டன் தெரு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக இந்த பாதை அமைகிறது. இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்க, நுாற்றுகணக்கான துாண்கள் வரிசையாக அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் -- சோழிங்கநல்லுார் தடத்தில், மேம்பால பாதையில் 42 ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மொத்தம் 46 ரயில் நிலையங்கள் அமைகின்றன. பெரும்பாலான ரயில் நிலையங்கள் மேம்பால பாதையில் அமைவதால், பணிகள் வேகமாக நடக்கின்றன. இதற்காக, வரிசையாக நுாற்றுக்கணக்கான துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தடத்தில், பெரும்பாலான இடங்களில், மேம்பால பாதையில் ரயில் நிலையங்கள் அமையவுள்ளதால், பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. பணிகள் தாமதம் இன்றி நடக்கவும், பணிகளின் நிலவரத்தை உடனுக்குடன் கண்காணித்து அறிக்கையை சமர்ப்பிக்கவும் சிறப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X