கேரளாவில் வெட்டப்படும் மரங்கள்பரிதாபமாக பலியாகும் பறவைகள்

Added : செப் 03, 2022 | |
Advertisement
மலப்புரம்:கேரளாவில் சாலையை அகலப்படுத்துவதற்காக பொறுப்பற்ற முறையில் மரங்கள் வெட்டப்படுவதால், ஏராளமான பறவைகள் பலியாகி விட்டதாக பறவைகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி

மலப்புரம்:கேரளாவில் சாலையை அகலப்படுத்துவதற்காக பொறுப்பற்ற முறையில் மரங்கள் வெட்டப்படுவதால், ஏராளமான பறவைகள் பலியாகி விட்டதாக பறவைகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மலப்புரம் மாவட்டத்தில், சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒப்பந்த அடிப்படையில்
இந்த பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இங்கு மரங்கள் வெட்டப்பட்ட போது, அவற்றில் இருந்த பறவைகள் தரையில் மோதி இறந்தது தொடர்பான 'வீடியோ' வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பறவைகள் நல ஆர்வலர்கள் கூறியதாவது:சாலை ஓரத்தில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு முன், அவற்றில் கூடு கட்டியுள்ள பறவைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மரங்களில் இருந்த பறவைகளை விரட்டிய பின், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், எந்தவித முன் ஏற்பாடும் இன்றி திடீரென இயந்திரங்கள் வாயிலாக மரங்களை வெட்டுகின்றனர்.
ரங்கள் கீழே விழும்போது, அவற்றில் உள்ள பறவைகள் தரையிலும், மரக்கிளையிலும் மோதி பரிதாபமாக இறக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, பறவைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மாநில அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக, கேரள பொதுப் பணித் துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறினார்.
நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'சாலை அகலப்படுத்தும் பணி ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. 'கேரளாவில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஒப்பந்தம் எடுத்துள்ளவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X