நெல்லை பாதுகாக்க அமைச்சர் அறிவுரை

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை:விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், மழையில் நனையாதபடி பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தி உள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் உணவு துறை செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் சக்கரபாணி தலைமையில், ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை:விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், மழையில் நனையாதபடி பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உணவு துறை செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் சக்கரபாணி தலைமையில், ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து இம்மாதம் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்து வருகிறது. விரைந்து நெல் கொள்முல் செய்ய தேவையான இயந்திரங்கள், ஈரப்பத கருவி, தார்பாலின் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கும்படி, அமைச்சர் கூறினார். நெல்லை உடனுக்குடன் அரிசி ஆலைகளுக்கும், கிடங்குகளுக்கும் அனுப்புவதுடன், மழையில் நனையாதபடி நெல் மூட்டைகளை பாதுப்பாக வைக்குமாறும், அமைச்சர் அறிவுறுத்தினார்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X