துணை மின் நிலையங்களில் மின்சார வாகன 'சார்ஜிங்' மையம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை உட்பட அனைத்து நகரங்களின் துணை மின் நிலையங்களில், 'எலக்ட்ரிக்' வாகனங்களுக்கான 'சார்ஜிங்' மையங்கள் அமைக்கப்பட உள்ளன.மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு, மக்களை அறிவுறுத்தி வருகிறது. அவசியம் மின்சார கார் ஒருமுறை முழு 'சார்ஜ்' செய்தால், 100 கி.மீ., - 120

சென்னை:சென்னை உட்பட அனைத்து நகரங்களின் துணை மின் நிலையங்களில், 'எலக்ட்ரிக்' வாகனங்களுக்கான 'சார்ஜிங்' மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு, மக்களை அறிவுறுத்தி வருகிறது.


அவசியம்


மின்சார கார் ஒருமுறை முழு 'சார்ஜ்' செய்தால், 100 கி.மீ., - 120 கி.மீ., வரை செல்லும். ௧ கி.மீ., பயண செலவு சராசரியாக, 2 ரூபாய் என்றளவில் உள்ளது. இது, பெட்ரோலில் 10 ரூபாயாகவும்; டீசலில் 8 ரூபாயாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தற்போது பலரும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதற்கு ஏற்ப அனைத்து இடங்களிலும் சார்ஜிங் மையங்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ., துாரத்திற்கும் ஒரு சார்ஜிங் மையமும், மாநகரங்களில் ௩ கி.மீ.,க்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் முதல் கட்டமாக, 100 இடங்களில் அமைக்க உள்ளது.


அறிவுறுத்தல்


தற்போது, சென்னை, கோவை, மதுரை உட்பட அனைத்து நகரங்களிலும் முக்கிய தெருக்களில் உள்ள துணை மின் நிலையங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சார்ஜிங் மையம் அமைக்கும் பணி முடிந்த பின், சார்ஜ் செய்ய எவ்வளவு கட்டணம் என்பது முடிவு செய்யப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X