விளம்பர பலகை வைத்த லாட்ஜ்க்கு மாநகராட்சி ரூ.10 ஆயிரம் அபராதம்| Dinamalar

விளம்பர பலகை வைத்த லாட்ஜ்க்கு மாநகராட்சி ரூ.10 ஆயிரம் அபராதம்

Added : செப் 04, 2022 | |
கோவை:அனுமதியின்றி விளம்பர பலகை வைத்திருந்த லாட்ஜ்க்கு, மாநகராட்சி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் அறிவுறுத்தல்களை மீறி, கோவை நகர் பகுதியில், அனுமதியற்ற விளம்பர பலகைகள் அடிக்கடி வைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினாலும், இரவோடு இரவாக மீண்டும் வைக்கப்படுகின்றன.இதுபோன்ற விளம்பர பலகைகளை அகற்றினாலும்,

கோவை:அனுமதியின்றி விளம்பர பலகை வைத்திருந்த லாட்ஜ்க்கு, மாநகராட்சி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் அறிவுறுத்தல்களை மீறி, கோவை நகர் பகுதியில், அனுமதியற்ற விளம்பர பலகைகள் அடிக்கடி வைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினாலும், இரவோடு இரவாக மீண்டும் வைக்கப்படுகின்றன.இதுபோன்ற விளம்பர பலகைகளை அகற்றினாலும், மீண்டும் வைக்காமல் இருக்க, இரும்பு கம்பிகளையும் வெட்டி அகற்ற, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டிருந்தார்.ஆனால், மாநகராட்சியால் 'பிளாக் லிஸ்ட்'டில் வைக்கப்பட்ட ஒரு நிறுவனம், தி.மு.க.,வை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து கொண்டு, பஸ் ஸ்டாப்புகளில் விளம்பர பலகைகள் வைத்து வருகின்றன. அத்தகைய விளம்பர பலகைகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற முடியாமல் தடுமாறி வருகின்றனர்.இச்சூழலில், டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு அருகிலேயே, என்.எச்.ரோட்டில், பூர்ணிமா லாட்ஜ் மாடியில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், கோர்ட் அறிவுறுத்தல்களை மீறி, இருபுறங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் (பொ) ஷர்மிளா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், விளம்பர பலகைகளை அகற்றவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு தலைமையில் சென்ற அதிகாரிகள் குழுவினர், களஆய்வு செய்து, பூர்ணிமா லாட்ஜ்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். விளம்பர பலகை மற்றும் இரும்பு கம்பிகளை உடனடியாக அகற்றாவிட்டால், லாட்ஜ்க்கு 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X