போதை கலாசாரம் ஒழியதினமும் விளையாடுங்கள்| Dinamalar

'போதை கலாசாரம் ஒழியதினமும் விளையாடுங்கள்'

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | |
சென்னை: ''தினமும் இரண்டு மணி நேரம் விளையாடுவேன் என்ற நிலையை, மாணவர்களிடம் ஏற்படுத்தி விட்டால் போதை கலாசாரம் இருக்காது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில், 'மோடி கபடி லீக்' எனப்படும் கபடி தொடர் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறும் அணிக்கு
'போதை கலாசாரம் ஒழியதினமும் விளையாடுங்கள்'

சென்னை: ''தினமும் இரண்டு மணி நேரம் விளையாடுவேன் என்ற நிலையை, மாணவர்களிடம் ஏற்படுத்தி விட்டால் போதை கலாசாரம் இருக்காது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில், 'மோடி கபடி லீக்' எனப்படும் கபடி தொடர் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை அண்ணாமலை அறிமுகம் செய்தார். பின் அவர், போட்டி தொடரின் சுடரை வீரர்களிடம் வழங்கினார்.


சமமாக பார்க்கும் மனநிலை


அண்ணாமலை பேசியதாவது:தமிழக பா.ஜ.,வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு துவக்கப் பட்டது. இது, அரசியல் சாராமல் விளையாட்டு துறை நிகழ்ச்சிகளை மட்டும் முன்னெடுத்து செல்கிறது.'விளையாட்டு தான் வெற்றி, தோல்வியை சமமாக பார்க்கும் மனநிலையை உருவாக்கி கொடுக்கும்' என்று, பிரதமர் மோடி கூறிஉள்ளார்.

சர்வதேச தரத்தில் பிரமாண்ட மோடி கபடி தொடர் வரும் 17ல் துவங்கி, 30ல் முடிவடைகிறது. தமிழக இளைஞர்களிடம் போதை உட்பட ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு விளையாட்டு ஒரு தீர்வாக இருக்கும். 'தினமும் இரண்டு மணி நேரம் விளையாடுவேன்' என்ற நிலையை, மாணவர்களிடம் ஏற்படுத்தி விட்டாலே போதை கலாசராம் இருக்காது.


பங்கேற்பு


கபடி தொடருக்கு பின், தொடர்ந்து ஒவ்வொரு விளையாட்டு போட்டியையும் அனைத்து கிராமங்கள், இளைஞர்களிடம் சேர்ப்பதை நோக்கி பா.ஜ., செல்லும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், இந்திய பைக் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா, பா.ஜ.,வில் இணைந்தார்.மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, நாராயணன் திருப்பதி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X