அ.தி.மு.க., அலுவலகம் சூறை போலீசுக்கு மாஜி எச்சரிக்கை| Dinamalar

அ.தி.மு.க., அலுவலகம் சூறை போலீசுக்கு 'மாஜி' எச்சரிக்கை

Added : செப் 04, 2022 | |
சென்னை:''அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில், காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் நீதிமன்றம் செல்வோம்,'' என, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.அவரது பேட்டி:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், குண்டர்கள், ரவுடிகள்,

சென்னை:''அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில், காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் நீதிமன்றம் செல்வோம்,'' என, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அவரது பேட்டி:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், குண்டர்கள், ரவுடிகள், போலீஸ் பாதுகாப்போடு, கட்சி அலுவலகம் உள்ளே புகுந்தனர்.இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.

அங்கிருந்த ஆவணங்கள், முக்கிய பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து, ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்; பதிவு செய்யவில்லை.இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பின், அந்த வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளன.

இன்று வரை பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி., இன்று வரை விசாரணையை துவக்கவில்லை. குற்றம் நடந்த இடத்தை வந்து பார்க்கவில்லை. அலுவலகம் அப்படியே உள்ளது.

போலீசார் வராததால், நாங்கள் அலுவலகம் செல்லவில்லை.கட்டடம் பத்திரத்தை பன்னீர்செல்வம் திருடிச் சென்றுள்ளார். அது அ.தி.மு.க., சொத்து. அதை எடுத்து செல்ல உரிமை கிடையாது. காவல் துறை தன் கடமையை செய்யத் தவறி உள்ளது. இரண்டு நாட்கள் பார்ப்போம். இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X