இன்றும், நாளையும் மழை பெய்யும்!

Added : செப் 04, 2022 | |
Advertisement
சென்னை:'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,

சென்னை:'தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், தர்மபுரி, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X